சியாமி ரெட்மி Y1 மற்றும் சியாமி ரெட்மி நோட் 4 மாடல்களுக்குள் உள்ள வித்தியாசம்

By Siva
|

சியாமி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ரெட்மி Y1 என்ற மாடலை அறிமுகம் செய்தது. ரெட்மி Y1 என்ற மாடலின் விலை ரூ.6999 முதல் 2GB ரேம் முதல் 16GB ரேம் உள்ள ரெட்மி Y1 லைட் வரை விலை விகிதங்கள் மாறுபடும். மற்ற மாடல்களின் விலை ரூ8999 முதல் ரூ.10999 வரை உள்ளது

சியாமி ரெட்மி Y1 மற்றும் சியாமி ரெட்மி நோட் 4 மாடல்களுக்குள் உள்ள வித்

ரெட்மி Y1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் போனாக வெளிவந்துள்ளது மட்டுமின்றி மற்ற நிறுவனங்களின் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே சியாமியின் ரெட்மி நோட் 4 மாடல் ரூ.10000 விலையை ஒட்டி உள்ளதால் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதே வரவேற்பை இந்த ரெட்மி Y1 மாடலும் பெரும் வகையில் உள்ளது.

நீங்கள் ஒரு சியாமி ஸ்மார்ட்போன்களின் விரும்பிகளாக இருந்தால் ரெட்மி Y1 மற்றும் ரெட்மி நோட் 4 மாடல்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை ஒப்பிடலாம்

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளே:

சியாமி ரெட்மி Y1 மாடல் 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் HD ரெசலூசன் 1280x720 பிக்சல் உள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 4 மாடல் ஸ்மார்ட்போனும் 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் FHD 1920x1080 பிக்சல்களை கொண்டுள்ளது பிக்சல்களை கொண்டு பார்க்கும்போது ரெட்மி நோட் 4, ரெட்மி Y1 மாடலை விட சிறந்ததாக உள்ளது

ஹார்ட்வேர்:

ஹார்ட்வேர்:

ரெட்மி Y1 மாடலில் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 435 SoC தன்மை உள்ளது. மேலும் இந்த மாடலின் பிராஸசரில் 3GB அல்லது 4GB மெமரி கெப்பாசிட்டி உள்ளது. மேலும் ஸ்டோரேஜ் தேவையென்றால் 128 GB வரை மெமரி கார்டு போடும் வசதியும் உண்டு.

இதேபோல் ரெட்மி நோட் 4 மாடலை பார்த்தோம் என்றால் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 SoC உடன் 2GB/3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி உள்ளது. மேலும் இந்த மாடலிலும் 128 GB வரை மெமரி கார்டு போடும் வசதியும் உண்டு.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ரெட்மி Y1 மாடலில் லேட்டஸ்ட் சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் MIUI 9 அம்சம் உள்ள ஆண்ட்ராய்டு 7,0 நெளக்ட் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இதைவிட கொஞ்சம் பழைய மாடலான ரெட்மி நோட் 4 மாடலில் ஆண்ட்ராய்ட் மார்ஷெல்லா ஓஎஸ் உள்ளது. MIUI 9 இப்போதுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நோட் 4 மாடல் விரைவில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த மாதம் களமிறங்கும் சியோமி மி 6சி அல்லது மி6 எக்ஸ் (லீக்ஸ் அம்சங்கள்).!அடுத்த மாதம் களமிறங்கும் சியோமி மி 6சி அல்லது மி6 எக்ஸ் (லீக்ஸ் அம்சங்கள்).!

 கேமிரா:

கேமிரா:

ரெட்மி Y1 மாடல் மற்றும் ரெட்மி நோட் 4 மாடல் கேமிராவில் வேறுபட்ட தன்மைகளை கொண்டுள்ளது. ரெட்மி Y1 மாடலில் 13MP மெயின் கேமிராவும் அதில் PDAF, LED பிளாஷ் மற்றும் f/2.2 அபெட்சரும் உள்ளது. அதேபோல் 16MP தன்மையுள்ள செல்பி கேமிராவில் LED செல்பி லைட் உள்ளது.

இதேபோல் ரெட்மி 4 மாடலில் 13MP பின்கேமிராவில் PDAF, f/2.0 அபெட்சரும், டூயல் டோன் பிளாஷூம் உள்ளது. மேலும் இந்த மாடலில் 5MP செல்பி கேமிரா 85டிகிரி ஆங்கிளில் புகைப்படங்கள் எடுக்கும் வகையில் உள்ளது.

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்

ரெட்மி Y1 மாடலில் 3080 mAh பேட்டரியும், சியாமி ரெட்மி நோட் 4 மாடலில் 4100 mAh பேட்டரியும் உள்ளது. இந்த வகையில் புதிய மாடலில் பேட்டரியின் தன்மை சற்று குறைவாகவே உள்ளது.

முடிவுரை:

முடிவுரை:

மொத்தத்தில் ரெட்மி நோட் 4 மாடல் செல்பி கேமிராவை தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் ரெட்மி Y1 மாடலை விட சிறந்ததாக உள்ளது. 16MP செல்பி கேமிரா என்ற அம்சங்களை தவிர பிராஸசிங் பவர், பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே ஆகியவை ரெட்மி நோட் 4 மாடலில் சிறந்ததாக உள்ளது

எனவே மற்ற அம்சங்களை விட செல்பி புகைப்படங்கள் அதிகம் எடுக்க வேண்டிய தேவை உள்ளவர்கள் மட்டும் ரெட்மி Y1 மாடலை தேர்வு செய்யலாம். அதை தவிர்த்து மற்றவர்கள் மற்ற சிறப்பு அம்சங்களை கணக்கில் கொண்ட் ரெட்மி நோட் 4 மாடலை வாங்கலாம் என்பதே இறுதியான கருத்தாகும்

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi Y1 and Redmi Note 4 are compared over here to know which one of these budget smartphones is better.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X