ரூ.10,600/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.? முரட்டு மெமரி + மெர்சல் கேமரா; ரெட்மீ எஸ்2 அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் அடுத்த "சூப்பர் பட்ஜெட்" அல்லது "பெஸ்ட் செல்லிங்" ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ எஸ்2 அறிமுகமாகியுள்ளது.

|

"ரூ.10,000/- தான்பா என்னோட பட்ஜெட்.. அதுக்குள்ள வாங்குற மாதிரி, சூப்பர் ஸ்மார்ட்போனா ஒன்னு பார்த்து சொல்லு" என்று யாரேனும் கேட்டல், கண்ணை மூடிக்கொண்டு ரெட்மீ எஸ்2 என்று கூறிவிடுங்கள். ஏனெனில் கடந்த வாரம் முழுவதும் வெளியான லீக்ஸ் மற்றும் டீஸர்களை உண்மையாக்கும் படியான அம்சங்களுடன், இன்று, சியோமி நிறுவனத்தின் அடுத்த "சூப்பர் பட்ஜெட்" அல்லது "பெஸ்ட் செல்லிங்" ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ எஸ்2 அறிமுகமாகியுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள ரெட்மீ எஸ்2 ஆனது, ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது. உடன் முன்னர் வெளியான சியோமி மி 6எக்ஸ் மற்றும் சியோமி ரெட்மீ நோட் ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மொழியை பின்பற்றுகிறது. மேலும் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை விரிவாக காண்போம்.

எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட்.!

எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட்.!

ரூ.10,000/- என்கிற புள்ளியில் வெளியாகியுள்ள ரெட்மீ எஸ்2 ஆனது, விலையை மீறிய கேமரா அம்சங்களை கொண்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக ரெட்மீ எஸ்2-வின் பின்புற கேமராக்கள், சமீபத்தில் வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டியை நிகழ்த்துமென்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவைகள் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

நிறுவனத்தின் இரண்டாவது 18: 9 திரை விகிதம்.!

நிறுவனத்தின் இரண்டாவது 18: 9 திரை விகிதம்.!

முழுமையான அம்சங்களை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது 18: 9 என்கிற திரை விகிதத்திலான, 720 × 1440 என்கிற பிக்சல் தீர்மானம் கொண்ட 5.99 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதாவது, முன்னர் வெளியான மி 6எக்ஸ் மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அதே டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

முரட்டுத்தனமான மெமரி.!

முரட்டுத்தனமான மெமரி.!

முன்னர் குறிப்பிட்டபடி, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் எஸ்2 ஆனது, மொத்தம் இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வாங்க கிடைக்கும். அதாவது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் மற்றும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் என்கிற இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடந்தைக்கும். தவிர 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஆதரவும் கொண்டிருக்கும்.

மெர்சலாக்கும் கேமராத்துறை.!

மெர்சலாக்கும் கேமராத்துறை.!

ரெட்மீ எஸ்2-வின் பிரதான அம்சமான, அதன் கேமரத்துறையை பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு 12 எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5 எம்பி இரண்டாம் நிலை டெப்த் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கேமரா அமைப்பானது, எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் போர்ட்ரெயிட் மோட் ஆதரவை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன் பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பிங்கர் பிரிண்ட் + பேஸ் அன்லாக்: டபுள் ட்ரீட்.!

பிங்கர் பிரிண்ட் + பேஸ் அன்லாக்: டபுள் ட்ரீட்.!

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ள ரெட்மீ எஸ்2, ஆனது பேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது டபுள் ட்ரீட். சமீப காலமாக பல ஸ்மார்ட்போன்களில், இதுவொரு பொதுவான அம்சமாக மாறிவிட்டதால் பெரிய அளவிலான ஆச்சரியம் ஏதுமில்லை. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான MIUI 9.5 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஒரு 3080mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

டிவி மற்றும் ஏசியை கட்டுப்படுத்தும் திறன்.!

டிவி மற்றும் ஏசியை கட்டுப்படுத்தும் திறன்.!

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 160.73 × 77.26 × 8.1 மிமீ மற்றும் 170 கிராம் எடையை கொண்டுள்ளது. ரெட்மீ எஸ்2-வில் உள்ள அகச்சிவப்பு (இன்ப்ராரெட்) சென்சாரைக் கொண்டு, வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் அல்லது ஏசிகளை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
விலை நிர்ணயம் மற்றும் இந்திய வெளியீடு.?

விலை நிர்ணயம் மற்றும் இந்திய வெளியீடு.?

மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களின் கீழ் - சாம்பல், பின்க் மற்றும் தங்கம் - கிடைக்கும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை சுமார் ரூ.10,600/- என்கிற புள்ளியையும், மறுகையில் உள்ள பிரீமியம் மாடல் ஆன 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது சுமார் ரூ.13,700/- என்கிற புள்ளியையும் எட்டலாம். சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. அதை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches Yet Another Snapdragon 625 Smartphone With Dual Rear Cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X