வழக்கமான பட்ஜெட் விலை; வழக்கத்திற்கு மாறான கேமராக்கள்; மிரட்டும் ரெட்மீ எஸ்2.!

வருகிற மே 10 ஆம் தேதியன்று, அதன் பட்ஜெட் விலை பிரிவின் கீழ், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

|

சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து-செய்து சியோமி நிறுவனத்திற்கு "போர்" அடித்து விட்டது போலும், வருகிற மே 10 ஆம் தேதியன்று, அதன் பட்ஜெட் விலை பிரிவின் கீழ், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ரெட்மீ வரிசைக்கான அதே பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்டிருப்பதால், இதை ஒரு வழக்கமான ரெட்மீ ஸ்மார்ட்போனாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் ஸ்மார்ட்போன் ​கேமராக்களில் புதுமைகளை புகுத்திக்கொண்டிருக்கும் ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது இந்த ரெட்மீ எஸ்2.! அப்படி என்ன அம்சங்களை கொண்டுள்ளது.?

சியோமி ரெட்மீ எஸ்2.!

சியோமி ரெட்மீ எஸ்2.!

உத்தியோகபூர்வ அறிமுகப்படுத்தலுக்கு முன்பு, பிரபல இ-காமர்ஸ் தளமான அலிஎக்ஸ்பிரஸ்-ல் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அம்சங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதல் சுவாரசியம் என்னவெனில், வெளியான பட்டியலில் சியோமி ரெட்மீ எஸ்2-வின் முன் மற்றும் பின்பக்க புகைப்படங்களும் காட்சிப்படுகிறது.

பிராதன அம்சங்கள் என்னென்ன.?

பிராதன அம்சங்கள் என்னென்ன.?

வெளியான பட்டியலின்படி, ரெட்மீ எஸ்2 ஆனது மெட்டாலிக் சேஸ் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது,. அதாவது சமீபத்தில் அறிமுகமான மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனை ஒத்திருக்கிறது. ஆச்சரியப்படுத்தும் வண்ணம், ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அது மேல் இடது மூலையில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வட்டமான கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புற மையத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

வண்ண மாறுபாடு மற்றும் டிஸ்பிளே அளவு.?

வண்ண மாறுபாடு மற்றும் டிஸ்பிளே அளவு.?

முன்பக்கத்தை பொறுத்தவரை, 18: 9 என்கிற திரை விகிதத்துடன் கூடபுல் வியூ டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு நேவிகேஷன் பாதங்களையும் டிஸ்பிளேவில் காணமுடிகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சில்வர்,ரோஸ் கோல்ட் மற்றும் கோல்ட் வண்ண மாறுபாடுகளில் வெளியாகும் என்பதையும் பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது. அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது, எச்டி ரெசல்யூஷன் (720 × 1440 பிக்சல்கள்) உடனான 5.99 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டடிஸ்பிளே கொண்டிருக்கும்.

ரேம் மற்றும் உள்ளடக்க சேமிப்பு.?

ரேம் மற்றும் உள்ளடக்க சேமிப்பு.?

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டா-கோர் எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்ட 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்கும். இரட்டை சிம் கார்டு ஆதரவு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது, பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றையும் தன்னுள் கொண்டு உள்ளது. வெளியான பட்டியலில் வேறு சேமிப்பு மாடல்கள் பற்றிய வார்த்தைகள் இல்லை. முன்னர் வெளியான வதந்திகள் மற்றும் லீக்ஸ் அறிக்கைகளின்படி, 4ஜி ரேம் உடனான 64ஜிபி சேமிப்பு மாடல் வெளியாகலாம்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
முன் மற்றும் பின்பக்க கேமராக்கள்.?

முன் மற்றும் பின்பக்க கேமராக்கள்.?

கேமராத்துறையை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2, அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது, ஒரு 12 மெகாபிக்சல் முதன்மை உணரி மற்றும் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. ரெட்மீ எஸ்2-வில் புகைப்படங்களை மேம்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான, எல்இடி சாப்ட் பிளாஷ் உடனான ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.

விலை நிர்ணயம் மற்றும் இந்திய வெளியீடு.?

விலை நிர்ணயம் மற்றும் இந்திய வெளியீடு.?

ஒரு 3,080 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான, நிறுவனத்தின் மியூஐ 9.5 இன்டர்பேஸ் கொண்டு இயங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரூ.11,530/- மற்றும் ரூ.13,500/- என்கிற புள்ளிக்கு இடையில் வெளியாகும். சீன அறிமுகத்தை தொடர்ந்து, உடனடியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi S2 global variant listed on AliExpress ahead of May 10 launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X