இந்தியர்களுக்கான ஸ்பெஷல்: சூப்பர் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மீ எஸ்2.!

வதந்திக்கப்படும் சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இப்போது தெளிவாக இல்லை

|

சூப்பர் பட்ஜெட் தொடங்கி மிட்-ரேன்ஜ் கடந்து ஹை-எண்ட் வரை பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும் சியோமி நிறுவனம் மேலுமொரு புதிய சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எக்ஸ்டிஏ (Xda) டெவலப்பர்களிடம் இருந்து வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, சியோமி நிறுவனம் இந்திய பட்ஜெட்-விலை நுகர்வோர்களை குறிவைத்து, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, புல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் பேஸ் லாக் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஸ்மார்ட்போன் சியோமி ரெட்மீ எஸ்2 என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலும், சீனாவிலும் மட்டும்.!

இந்தியாவிலும், சீனாவிலும் மட்டும்.!

வதந்திக்கப்படும் சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இப்போது தெளிவாக இல்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும், சீனாவிலும் பட்ஜெட் விலை நிர்ணயத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்பது மட்டும் (அறிக்கையின் படி) உறுதி.

புல் ஸ்க்ரீன் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

புல் ஸ்க்ரீன் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே.!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை (எக்ஸ்டிஏ அறிக்கையின்படி) ரெட்மீ எஸ்2 ஆனது, ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட புல் ஸ்க்ரீன் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் firmware msm8953-ஐக் காட்டுகிறது. அதாவது, கூறப்படும் சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு இயங்கும் என்று அர்த்தம்.

3080 mAh பேட்டரி.!

3080 mAh பேட்டரி.!

16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு மற்றும் 3080 mAh பேட்டரி கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது பெரும்பாலான சியோமி ஸ்மார்ட்போன்களைபோன்றே ஒரு அண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு இயங்கும். அது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான மியூஐ 9 ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

டூயல் பின்பக்க கேமரா.!

டூயல் பின்பக்க கேமரா.!

கேமரா துறையை பொறுத்தவரை, சியோமி ரெட்மீல் எஸ்2 ஆனது ஒரு 12எம்பி சோனி IMX486 அல்லது OmniVision OV12A10 முதன்மை சென்சார் மற்றும் 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் (சாம்சங் S5K5E8) என்கிற டூயல் பின்பக்க கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 5எம்பி சாம்சங் சென்சார் கொண்டிருக்கும். இதன் கேமராக்கள் EIS, போர்ட்ரெய்ட் மோட் மற்றும் மிகவும் முக்கியமாக பேஸ் லாக் போன்ற அம்சங்களுடன் தொகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
மி 7 ஸ்மார்ட்போன்.!

மி 7 ஸ்மார்ட்போன்.!

சம்பீத்திய பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் உட்பட, ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விட்ட நிலைப்பாட்டில், சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் அறிவிப்பானது, சியோமி பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்கிடையில் சியோமி நிறுவனத்தின் மி 7 ஸ்மார்ட்போன் ஆனது, கூடிய விரைவில் தொடங்குப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi S2: Affordable dual camera, full-screen smartphone for India coming soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X