சியோமி ரெட்மீ ப்ரோ 2 கருவியில் 18: 9 எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறலாம்.!

|

சமீபத்தில், வரவிருக்கும் சியோமி ரெட்மீ 5 பற்றிய கசிவுகள் வெளியானது அதை தொடர்ந்து இப்போது இப்போது, டிஎன்இஏஏ வலைத்தளத்தில் வரவிருக்கும் ஒரு சியோமி தொலைபேசிகளில் ஒன்று வித்தியாசமான காட்சி அமைப்போடு அதாவது எல்ஜி ஜி6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்8 அடிச்சுவடுகளை பின்பற்றும் ஒரு டிஸ்பிளே அம்சம் கொண்டு வெளிவரும் என்பது போல் தெரிகிறது.

சியோமி ரெட்மீ ப்ரோ 2 கருவியில் 18: 9 எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறலாம்.!

பிரபலமான ட்விட்டர் அடிப்படையிலான லீக்ஸ்டர் ஆன எம்எம்டிஜே_சீனா தனது கணக்கில் எல்ஜி ஜி6 மற்றும் கேலக்ஸி S8 போன்ற 18: 9 டிஸ்பிளே விகிதத்துடன் ஒரு புதிய ரெட்மீ சாதனத்தின் எல்சிடி டிஸ்ப்ளே உருவாகிறது என்று தகவல் வெளியிட்டுள்ளார். சீன உற்பத்தியாளரான சியோமி ஏற்கனவே அதன் மி மிக்ஸ் கருவியில் முற்றிலும் பெஸல்-லெஸ் வடிவமைப்பு இருக்கும் என்று கூறி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலைப்பாட்டில் இந்த தகவல் மேலும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.

வெளியாகியுள்ள இந்த தகவலின் கீழ் உருவாக்கம் பெரும் கருவி எது என்ற விவரங்கள் இல்லை என்றாலும் கூட இந்த18: 9 எல்சிடி பேனலை ரெடிமே ப்ரோ 2 கருவி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரெட்மீ வரிசைகளிலேயே ரெட்மே ப்ரோ கருவிகளில் தான் நிறுவனம் அதன் மேல் உச்சநிலை அம்சங்களை நுழைகித்து வருகிறது. மேலும் வெளியான தகவலின் கீழ் இது ஒரு டீக்கா-கோர் மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் மற்றும் ஒரு ஓஎல்இடி டிஸ்பிளேவும் கொண்டிருக்கலாம்.

ஆகமொத்தம் இறுதியில், அடுத்த தலைமுறை ரெட்மீ ப்ரோ கருவியில் நாம் மிகவும் அற்புதமான அம்சங்களை அனுபவிக்க உள்ளோம் என்பது மட்டும் உறுதி. சியோமி ஸ்மார்ட்போன் குறிப்பாக இந்தியாவில் ஒரு முக்கியமான இடத்தை அமைக்க புதுமையான கருத்துக்களை முயற்சி செய்வதே காரணமாகும் என்பது வெளிப்படை.

அதற்கு எடுத்துக்காட்டாய் நிறுவனத்தின் மி மிக்ஸ் சாதனத்தை கூறலாம். ஏற்கனவே சந்தையில் 18: 9 டிஸ்பிளே விகிதத்துடன் சில சாதனங்கள் இருக்கும் பட்சத்திலும் கூட சியோமி நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை துவங்குவது சற்று யதார்த்தமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட தயாரிப்பு சம்பந்தப்பட்ட சில அதிகாரப்பூர்வ விவரங்களை அறியும் வரை, இந்த தகவலை உப்பில் ஒரு அளவு எடுத்துகொள்வதே நல்லது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Pro 2 might feature an 18:9 LCD display. Read more about this Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X