Just In
- 6 hrs ago
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 10 hrs ago
சிறந்த அம்சங்களோடு Mi Notebook 14(IC) லேப்டாப் அறிமுகம்: விலை இவ்வளவுதானா?
- 12 hrs ago
இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?
- 13 hrs ago
வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.!
Don't Miss
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
48எம்பி கேமராவுடன் ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை?
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூன்று ரியர் கேமரா அமைப்பு, தனித்துவமான சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9டி டிஸ்பிளே
ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 × 2340 பிக்சல்கள் தீர்மானம், 450nits பிரைட்நஸ் வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 7என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ பிராசஸ்ர் வசதியுடன் மாலி-ஜி57 எம்சி3 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 (MIUI 12 ) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
25 எம்பி செல்பி கேமராவுடன் கூல்பேட் எஸ்: ரொம்ப கம்மி விலையில்!

இந்த ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9டி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். விரைவில் ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

5G SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் கார்பன் கிரே, ட்விலைட் ப்ளூ, சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் ஓஷன் கிரீன் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 9டி சாதனம் ஆனது EUR 199 (இந்திய மதிப்பில் ரூ.17,850) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190