சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்?

|

சியோமி நிறுவனம், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன், புதிய MIUI 11 இயங்குதளத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 8|சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 8|சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ

சியோமி நிறுவனம் அண்மையில் ரெட்மி 8A மற்றும் ரெட்மி 8 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

64 மெகா பிக்சல் கொண்ட குவாட் கேமரா செட்டப்

64 மெகா பிக்சல் கொண்ட குவாட் கேமரா செட்டப்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் உடன் 4,500 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா செட்டப் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

 • 6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
 • மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
 • 6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
 • குவாட் கேமரா செட்டப்
 • 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
 • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
 • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
 • 2 டெப்த் சென்சார்
 • 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
 • 4,500 எம்.ஏ.எச் பேட்டரி
 • சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ

  சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ

  • 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 14,999 மட்டுமே.
  • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 15,999 மட்டுமே.
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 17,999 மட்டுமே.
  • பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.!பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.!

   சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

   சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

   • 6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
   • ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
   • 4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
   • குவாட் கேமரா செட்டப்
   • 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
   • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
   • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
   • 2 டெப்த் சென்சார்
   • 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
   • 4,000 எம்.ஏ.எச் பேட்டரி
   • சியோமி ரெட்மி நோட் 8

    சியோமி ரெட்மி நோட் 8

    • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 9,999 மட்டுமே.
    • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 12,999 மட்டுமே.
    • அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அமேசான் தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 8, Redmi Note 8 Pro Launched In A Price Off : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X