48எம்பி கேமரா: ரூ.10,000 விலை-மிரட்டலான சியோமி ரெட்மி நோட் 7 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் இன்று 48எம்பி கொண்ட அசத்தலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும் அதிநவீன மென்பொருள் அம்சங்கள் மற்றும் சிறப்பான வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கருப்பு, நீலம் தங்கம் போன்ற நிறங்களில் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, பின்பு கைரேகை சென்சார், செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:
சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 636:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
இக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 999யுவான்( இந்திய மதிப்பில் ரூ.10,000)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.12,000)
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1399யுவான்( இந்திய மதிப்பில் ரூ.14,000)


Click it and Unblock the Notifications