Home
Mobile

சந்தேகமில்லா சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 7.! என்ன ஸ்பெசல் தெரியுமா?

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 7 மற்றும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அண்மையில் சியோமி நிறுவனம், பட்ஜெட் விலையில் இந்தியச் சந்தியில் அறிமுகம் செய்தது.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 7 மற்றும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அண்மையில் சியோமி நிறுவனம், பட்ஜெட் விலையில் இந்தியச் சந்தியில் அறிமுகம் செய்தது.

சந்தேகமில்லா சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 7.!

சியோமி நிறுவனத்தின் முதல் பிளாஷ் சேல்ஸ் விற்பனையில் 2,00,000 ரெட்மி யூனிட்களை பிளிப்கார்ட் மற்றும் மி தளத்தில் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 சிறப்பம்சம்:

சியோமி ரெட்மி நோட் 7 சிறப்பம்சம்:

சியோமி ரெட்மி நோட் 7, 6.3' இன்ச் கொண்ட முழு எச்.டி பிளஸ் எல்.சி.டி டியர் டிராப் நாட்ச் உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. சியோமி ரெட்மி நோட் 7, ஆண்ட்ராய்டு பை 9.0 மற்றும் MIUI 10 அடிப்படையிலான இயங்குதளத்துடன் கூடிய 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜி ரேம் என இரண்டு வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது.

டூயல் ஆப்ஸ்

டூயல் ஆப்ஸ்

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 4.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் நீடித்து உழைக்கும் 4000 எம்.எமெஹ் பேட்டரியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இத்துடன் கூடுதலாக டூயல் ஆப்ஸ் சேவையும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இல் வழங்கப்பட்டுள்ளது, இதனால் ஒரே நேரத்தில் இரண்டு அக்கௌன்ட்களை பயனர்கள் எளிதில் கையாள முடியும்.

பெர்மிஷன்ஸ் சேவை

பெர்மிஷன்ஸ் சேவை

"பெர்மிஷன்" சேவையின்படி உங்கள் மொபைலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனித்தனி ஆப் லாக்கிங் சேவை வழங்கப்பட்டுள்ளது. முழு திரை வசதி மற்றும் பல வகையான புதிய தீம்கள், ஐகான்கள் போன்ற பல சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லாக் ஸ்கிரீன் சேவை

புதிய லாக் ஸ்கிரீன் சேவை

புதிய லாக் ஸ்கிரீன் சேவை மேம்படுத்தல்களையும் பெற்றுள்ளது. சியோமி ரெட்மி நோட் 7 இன் லாக் ஸ்கிரீன் சேவை வித்தியாசமான பல புதிய வால்பேப்பர் வசதிகளை வழங்கியுள்ளது. செய்தி, விளையாட்டு, வன வாழ்க்கை, வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் லாக் ஸ்கிரீன் சேவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறந்த அனுபவம்

சிறந்த அனுபவம்

சியோமி பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க சியோமி நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் உங்களின் போனை ஆன் செய்யும்பொழுது வால்பேப்பர்கள் தானாய் மாறிக்கொள்ளும். நோட்டிபிகேஷன்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய புதிய முறையையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிரட்டலான கேமரா சேவை

மிரட்டலான கேமரா சேவை

சியோமி நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் தயாரிப்புகளில் கேமரா சேவை எப்பொழுதும் தனிச் சிறப்பு தான். சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இல் 12 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் கேமராவும், 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் உண்மையிலேயே சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டிற்கான சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பட்டியலில் சியோமி ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7 sets new benchmarks in budget smartphone category : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X