ரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 7ப்ரோ மற்றும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7ப்ரோ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடல் ரூ.14,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் இந்த மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடல் ரூ.16,999-விலையில் அறிமுகம்செய்யப்பட்டது, தற்சமயம் இந்த மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கோ
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.4,499-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1ஜிபி ரேம் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட் ரெட்மி கோ மாடல் ரூ.4,799-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.4,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ டிஸ்பிளே
ரெட்மி நோட் 7 ப்ரோ பொதுவாக6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ சேமிப்பு
ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ பேட்டரி
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள், கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.

சியோமி ரெட்மி கோ சிறப்பம்சங்கள்
- 5' இன்ச் கொண்ட 1280x720 பிக்சல் உடைய எச்.டி டிஸ்பிளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- அட்ரினோ 308 GPU
- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 8 மெகா பிக்சல் பின்பக்க பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- எல்இடி பிளாஷ்
- 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத் 4.1
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications








