பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக 48எம்பி கேமராவுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இன்று பிளிப்கார்ட் வலைதளத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல் 6ஜிபி
ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ சார்பில் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ரெட்மி நோட் 7 ப்ரோ பொதுவாக6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள்
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள், கருப்பு, சிவப்புஇநீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.


Click it and Unblock the Notifications