ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கிய பிக் பில்லியன் டேஸ் சலுகையிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர விலைகுறைப்பு
அதன்படி ரெட்மி நோட் 7ப்ரோ((4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ரூ.14,999-விலையிலும்விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ டிஸ்பிளே
ரெட்மி நோட் 7 ப்ரோ பொதுவாக6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட்வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ சேமிப்பு
ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ கேமரா
இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள், கருப்பு, சிவப்புஇநீலம் போன்ற நிறங்களில்
இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.


Click it and Unblock the Notifications