Home
Mobile

ரூ.9,999-விலையில் 48எம்பி கேம் உடன் சியோமி ரெட்மி நோட் 7, நோட் 7ப்ரோ அறிமுகம்.!

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகை கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7, ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதியுடன் குறைந்த விலையில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி கேம் உடன் சியோமி ரெட்மி நோட் 7, நோட் 7ப்ரோ அறிமுகம்.!

மேலும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ,நோட் 7, இரண்டு மாடல்களும் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி, 8-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிளிப்கார்ட், மி.காம் போன்ற தளங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகை கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சியோமி புதிய ஸ்மார்ட்போன்களின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி ISOCELL Bright GM1 சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி செல்பீ சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு
4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி
3.5எம்எம் ஆடியோ ஜாக்
கருப்பு, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 14எம்பி ஏஐ செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு
4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7-விலை:

சியோமி ரெட்மி நோட் 7-விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ - விலை:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ - விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7, Note 7 Pro launched in India with 48MP Camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X