பிப்ரவரி 12: அசத்தலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

|

இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

பிப்ரவரி 12: அசத்தலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் மி.காம் மற்றும் பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இப்போது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

 சேமிப்பு:

சேமிப்பு:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 விலை:

விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 999யுவான்( இந்திய மதிப்பில் ரூ.10,000)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1199யுவான்( இந்திய மதிப்பில் ரூ.12,000)
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை 1399யுவான்( இந்திய மதிப்பில் ரூ.14,000)

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7 India launch may happen on February 12: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X