பட்ஜெட் விலையில் மிரட்டலான சியோமி ரெட்மி 6 ப்ரோ அறிமுகம்.!
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தற்சமயம் தாய்லாந்து நாட்டில் ரெட்மி 6 ப்ரோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இரண்டு பின்புற கேமரா மற்றும் இரண்டு செல்பீ கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்போன் பொறுத்தவரை கருப்பு, நீலம், ரோஸ், தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் நிறம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 6 ப்ரோ:
சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும்
கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன்636
எப்போதும் போல 14என்எம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்636 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி+2எம்பி செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:
சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.15,700-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications