Home
Mobile

4 கேமரா & நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகும் சியோமி ரெட்மி 6 ப்ரோ.! எவிடன்ஸ் இதோ.!

சியோமி நிறுவனத்தின் அடுத்த புதிய தயாரிப்பின் வெளியீட்டு அறிவிப்பைப் பற்றி எதிர்பார்த்து இருந்த சியோமி ரசிகர்களுக்குப் பிரத்தியேக தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் அடுத்த புதிய தயாரிப்பின் வெளியீட்டு அறிவிப்பைப் பற்றி எதிர்பார்த்து இருந்த சியோமி ரசிகர்களுக்குப் பிரத்தியேக தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

4 கேமரா & நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகும் சியோமி ரெட்மி 6 ப்ரோ.!

சியோமி நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐ பற்றிய தகவல்கள் மற்றும் அதன் விபரக்குறிப்புகள் வலைத்தளங்களில் லீக் ஆகியது ஆனால் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இப்பொழுது பிரத்தியேகமாக எவிடன்ஸ் உடன் நமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளே

4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளே

சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளே உடன் களமிறங்க போகிறது என்பது எவிடன்ஸ் உடன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் ஒரிஜினல் புகைப்படங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.

 IMEI எண்

IMEI எண்

வெளியிடப்பட்டிருக்கும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் புகைப்படங்கள், அதன் விபரக்குறிப்பு மற்றும் ரெட்மி 6 ப்ரோ பாக்ஸ் உடன் கூடிய ஸ்மார்ட்போன்-ற்கான IMEI எண்ணுடன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. புகைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் IMEI(M1806E7TG) எண்கள் சியோமி ரெட்மி 6 ப்ரோ வின் வைப்பைச் சான்றிதழுடன் சரியாகப் பொருந்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு

- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு என இரண்டு வேரியண்டாக வருகிறது.
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் (எதிர்பார்க்கப்படுகிறது)
- 6.26 இன்ச்முழு எச்டி பிளஸ் கொண்ட 2280×1080 பிக்சல் உடைய 19:9 விகித நாட்ச் டிஸ்பிளே
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட பின் கேமரா
- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு ஓரியோ / MIUI 10 இயங்குதளம்
- 4000 எம்ஏஎச் பேட்டரி
- விலை ரூ.14,999(எதிர்பார்க்கப்படுகிறது)

4 கேமரா

4 கேமரா

புதிதாய் வெளிவரவிருக்கும் ரெட்மி 6 ப்ரோ வின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சியோமி நிறுவனம் தெரிவித்தபடி இதில் 4 கேமராவுடன் வெளியாகி இருக்கிறது. ரெட்மி 6 ப்ரோ வின் பின்னால் 12 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் கொண்ட இரண்டு டூயல் கேமராவும், 20 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் கொண்ட முன் செல்பி கேமராவுடன் வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 12 மெகா பிக்சல் ஆட்டோ போகஸ் கேமரா சியோமி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

 போக்கோ எப்1

போக்கோ எப்1

இந்த புதிய சியோமி ரெட்மி 6 ப்ரோ வரும் வாரத்தில் இந்தியா சந்தையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வரை ப்ளூ மற்றும் பிளாக் வேரியண்ட் இன் புகைப்படங்கள் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ரெட்மி 6 ப்ரோ அப்படியே போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் போன்றே தோற்றமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 6 Pro leak shows four cameras and display notch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X