விரைவில்: மிரட்டலான சியோமி ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன்.!
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் துவகத்தில் மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிவித்திருந்தது, இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில்
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

தற்சமயம் இணையத்தில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு குறிப்புகள் வெளிவந்துள்ளது,மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.16,500 முதல் ரூ.21,000-க்குள் இருக்கும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது, குறிப்பாக சிவப்பு, கருப்பு, நீலம் தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பொதுவாக 5.45-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது, அதன்பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதனுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள்
அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications