விரைவில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி 6 ப்ரோ.! எப்போன்னு தெரியுமா?
சியோமி பிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்மார்ட் போன் சியோமி ரெட்மி 6 ப்ரோ தான்.
சியோமி பிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்மார்ட் போன் சியோமி ரெட்மி 6 ப்ரோ தான். ஆனால் எப்பொழுது இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்ற தகவலை இன்னும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை.
ஆனால் தற்பொழுது செய்தி ஊடகத்திற்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் வரும் நவம்பர் 1 ஆம் தேதி புது டெல்லி இல் நடைபெறவுள்ள சியோமி நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

புது டெல்லி இல் நடைபெறப் போகும் நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் நவம்பர் 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ 6.2' இன்ச் ஐ.பி.எஸ் எல்.சி.டி. நாட்ச் டிஸ்பிளேயுடன் கூடிய ஸ்னாப் டிராகன் 636 பிராசஸருடன் வெளிவருகிறது. "பிளாக்ஷிப் கேமரா கில்லர்" என்ற பேருக்கு இணங்க 20 மேகலா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் டூயல் செல்பி கேமராவுடன் வருகிறது. அத்துடன் 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமராவுடன் வருகிறது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இணக்கத்துடன் கூடிய MIUI 9 இயங்குதளத்துடன் வெளிவருகிறது சியோமி ரெட்மி 6 ப்ரோ . மைக்ரோ எஸ்.டி கார்டு மற்றும் பின்புற பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் களமிறங்கத் தயாராகவுள்ளது.
பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் ரோஸ் கோல்ட் நிறத்தில் சியோமி ரெட்மி 6 ப்ரோ விற்பனைக்கு வருகிறது. சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் வெறும் ரூ.14,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications