2017 ஆகஸ்ட் 21 : புதிய சியோமி ரெட்மி நோட் 5ஏ அறிமுகம்.!
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி புதிய சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது, சீனாவில் வரும் திங்கள் அன்று இரவு 7.30க்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 425 செயலி கொண்டுள்ளது இந்த சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போன் மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இயங்குதளம்:
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் ஸ்னாப்டிராகன் 425 செயலி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

உள்ளடக்க மெமரி:
சியோமி ரெட்மி நோட் 5ஏ 16ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 2ஜிபி ரேம் இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரியர் கேமரா:
ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3000எம்ஏஎச்:
ரெட்மி நோட் 5ஏ பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் எடைப் பொதுவாக 150 கிராம் எனக் கூறப்படுகிறது.

விலை:
சியோமி ரெட்மி நோட் 5ஏ விலைப் பொறுத்தவரை ரூ.9,600வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications