ஜனவரியில் களமிறங்குகிறது இந்தியாவின் "நெக்ஸ்ட் டாப் செல்லிங்" ஸ்மார்ட்போன்.!
அதாவது 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டிருக்கும் மற்றும் ஒரு உயரமான டிஸ்பிளே கொண்டிருக்கும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனை தொடர்ந்து, சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமியிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எந்தவிதமான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிற்குள்ளும் சிக்கவில்லை என்றாலும் கூட, வரவிருக்கும் இந்த சாதனத்தின் புதிய விவரங்களை வதந்திகள் பரந்தளவில் வழங்கிய வண்ணம் உள்ளன.

5.9-அங்குல டிஸ்பிளே
தற்போது, விபோ வழியாக கசிந்துள்ள ஒரு புகைப்படமானது, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் பிம்பத்தை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. சீன மொழியில் பட்டியலிடப்பட்டுள்ள சில அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அம்சத்தினை பொறுத்தமட்டில் ரெட்மீ 4 மற்றும் நோட் ஸ்மார்ட்போன்கள் போலில்லாமல் 5.9-அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

உயரமான டிஸ்பிளே
அதாவது 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டிருக்கும் மற்றும் ஒரு உயரமான டிஸ்பிளே கொண்டிருக்கும். ரெட்மீ 4 மற்றும் நோட் கருவிகள் 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உடன் இக்கருவி இறுதியாக நவநாகரீக பெஸல்லெஸ் வடிவமைப்பை பெறுமென தெரிகிறது.

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி
எனினும், இந்த சாதனம் அதே முழுஎச்டி+ திறனிலான 1080 x 2160 பிக்சல் என்கிற திரை தீர்மானத்தை தான் கொண்டிருக்கும், அதன் முன்னோடி ஸ்மார்ட்போன்களை போலவே. மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில், ரெட்மீ நோட் 5 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம்.

64 ஜிபி உள்புற சேமிப்பு
இந்த செயலியானது, அடுத்த ஆண்டு வெளியாகும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் ஒரு பொதுவான அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சேமிப்புத்துறையில், வெளியான லீக்ஸ் புகைப்படத்தின் இடம்பெற்றுள்ள சாதனமானது 64 ஜிபி உள்புற சேமிப்பு கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம் மாறுபாடு
அதனால் இக்கருவி இரண்டு ரேம் மற்றும் சேமிப்பக கட்டமைப்புகளுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 32 ஜிபி சேமிப்புடன் கூடிய ஒரு 3 ஜிபி ரேம் மாறுபாடு மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு உடனான ஒரு 4 ஜிபி ரேம் மாறுபாடு வெளியாகலாம். சியோமி ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனில் 2ஜிபி மாறுபாடு வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை.

12எம்பி + 12எம்பி என்கிற டூயல் கேமரா
ஒளியியலை பொறுத்தமட்டில், பின்பக்கம் ஒரு 12எம்பி கேமரா சென்சார் உள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டூயல் கேம் அமைப்பினை கொண்டு வருவதால் இதுவும் 12எம்பி + 12எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.

4000எம்ஏஎச் அளவிலான நீக்கமுடியாத பேட்டரி
முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. முன்பக்கத்திலும் இரட்டை கேமரா சென்சார்களை எதிர்பார்க்கலாம். ஒரு 4000எம்ஏஎச் அளவிலான நீக்கமுடியாத பேட்டரி கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை கலப்பு சிம் ஆதரவு
மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்க ஆதரவு மற்றும் இரட்டை கலப்பு சிம் ஆதரவு ஆகியவைகளை கொண்டுவரும் இக்கருவியின் கசிந்த படத்தை பொறுத்தமட்டில் இது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சமீபத்திய மியூஐ 9 கொண்டு இயங்கலாம்.


Click it and Unblock the Notifications