Home
Mobile

6ஜிபி ரேம் 128ஜிபி மெமரியுடன் ரெட்மீ நோட் 5 அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

ரெட்மீ நோட் 5 சாதனத்தில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் வாரம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துவிடுகிறது. குறிப்பாக சிறந்த மென்பொருள் அம்சம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் சியோமி ஸ்மார்ட்போன் வெளிவருகின்றது.

6ஜிபி ரேம் 128ஜிபி மெமரியுடன் ரெட்மீ நோட் 5 அறிமுகம்.!

இந்நிறுவனம் தற்சமயம் 6ஜிபி ரேம் வசதியுடன் சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விலை:

விலை:

3ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மீ நோட் 5 சாதனத்தின் விலை ரூ.10,000-ஆக உள்ளது, 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை
ரூ.13,000-ஆக உள்ளது. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 6ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மீ நோட் 5 சாதனத்தின் விலை ரூ.17,200- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மீ நோட் 5ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160×1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

ரெட்மீ நோட் 5 தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ரெட்மீ நோட் 5 சாதனத்தில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு
இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு ரெட்மீ நோட் 5டி சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 with 6GB RAM and 128GB storage launched in China : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X