"இது" நடந்தால் இனி ஒருவரும் ரெட்மீ ஸ்மார்ட்போனை வாங்க மாட்டார்கள்.!

Written By:

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலைப்பாட்டில் சீனாவின் ஒரு புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவன மொன்று சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் டீஸர் பிரச்சாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆண்ட் ராய்டு ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ நோட் 5-யின் வெளியீடு விவரமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் வெளியாகவுள்ள இந்த கருவி சியோமி ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விலை.!

கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விலை.!

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ஜேடி.காம் ஆனது சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை ஒரு திரையால் மூடிய புகைப்படத்தை வெளியிட்டு அதை கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விலை நிர்ணயத்தில் "டீஸ்" செய்துள்ளது.

இந்திய மதிப்பின்படி ரூ.87,515/- ஆகும்.!

இந்திய மதிப்பின்படி ரூ.87,515/- ஆகும்.!

வலைதளத்தின் படி, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை விலையானது சுமார் 1,339 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.87,515/- ஆகும். உடனே "மலிவு விலை காரணமாகத்தானே ரெட்மீ கருவிகள் பிரபலமாகின. ஐபோன், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாக வெளியானால் என்ன ஆவது.?" என்று யோசிக்கத்தோங்க வேண்டாம்.

ராசியான எண் என்பதால் தான் 8888 யுவான்.!

ராசியான எண் என்பதால் தான் 8888 யுவான்.!

இதன் விலை நிர்ண்யம் இந்த அளவிற்கு இருக்க வாய்ப்பே இல்லை, எட்டு என்பது மிகவும் ராசியான எண் என்பதால் தான் 8888 யுவான் என்று பட்டியலிடப்பட்டுள்ளது என்று கிஸ்மோ சீனா வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் சாதனமான இது சீனாவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஆர்வமாக காத்திருக்கும் தொலைபேசிகளில் ஒன்றாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரெட்மீ நோட் 4 தான் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

18: 9 என்ற காட்சி விகிதம்

18: 9 என்ற காட்சி விகிதம்

அம்சங்களை பொறுத்தமட்டில், சியோமி நிறுவனம் அதன் முழு டிஸ்பிளே கொண்ட அதாவது 18: 9 என்ற காட்சி விகிதம் (2160x1080பிக்சல்கள்) அளவிலான அதன் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சியோமி தற்போது அதன் மி மிக்ஸ் மற்றும் மி மிக்ஸ் 2 ஆகிய கருவிகளில், எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பானது அடுத்த ரெட்மீ கருவியிலும் காணலாம் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள டிஇஎன்ஏஏ (TENAA) பட்டியல் மூலம் அறியப்படுகிறது.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

அதாவது அனைத்து பக்கங்களிலும் மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவை அடுத்த ரெட்மீ ஸ்மார்ட்போனில் எதிர்நோக்கலாம். முன்னர் வெளியான கசிவுகளும் இதே அளவையே குறிப்பிடுகின்றன. இந்த சியோமி ஸ்மார்ட்போனின் இதர வடிவமைப்பு பற்றி பேசுகையில், வழக்கமான முன்பக்க பொத்தான்கள் இடம்பெறவில்லை.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

பின்புறத்தை பொறுத்தமட்டில், மையத்தில் கேமரா, உடன் கைரேகை சென்சார் மற்றும் மி லோகோ இடம்பெறலாம். 4000எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் கொண்டிருக்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கலாம். பிற ரெட்மீ ஸ்மார்ட்போன்களை போலவே உலோகத் தோற்றத்திலேயே வெளியாகலாம். 5.5 முதல் 5.9 இன்ச் வரையிலான அளவில் ஒரு முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம்

4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம்

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் வன்பொருள் துறையை பொறுத்தமட்டில், இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டா-கோர் (மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே) உடனாக 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கலாம். 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும் கொண்டிருக்கலாம்.

கேமரா

கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், சாத்தியமான ஒரு இரட்டை கேமரா தொகுதி இடம்பெறும். அது 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்க வாய்ப்புள்ளது. முன்பக்கம் ஒரு 12எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Redmi Note 5 teaser spotted on e-commerce site ahead of official launch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot