விரைவில் : 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மி நோட் 5.!
சியோமி ரெட்மி நோட் 5 பொதுவாக 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு7.1.1இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்தசாதனம் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் மாடல் எண் எம்இடி7-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர்
சில்வர்இ சாம்பல், சிவப்பு, பிங்க், தங்கம், ப்ளூ, வெள்ளை, ரோஸ் கோல்ட் மற்றும் பிளாக் போன்ற நிறங்களில் இந்த சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1080-1920)பிக்சல் தீர்மானம் மற்றும்
18: 9 என்றதொரு புதிய விகிதம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 636:
சியோமி ரெட்மி நோட் 5 பொதுவாக 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு
7.1.1இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி மெமரி வித்தியாசத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,
அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
சியோமி ரெட்மி நோட் 5 பொறுத்தவரை 12எம்பி ரியர் கேமரா எனக் கூறப்படுகிறது, அதன்பின்பு 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications