ஸ்னாப்டிராகன் 630 செயலி உடன் வெளிவரும் சியோமி நோட் 5.!
சியோமி நோட் 5 பின்புற கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் எஸ்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் சியோமி நோட் 4 பொறுத்தவரை மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது, அதைத் தொடர்ந்து இப்போது சியோமி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திடட்மிட்டுள்ளது சியோமி நிறுவனம்.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலை பற்றிய பல விவரங்கள் சீன வலைதளங்களில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
இந்த சியோமி நோட் 5 பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு 1.4ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 720பிக்சல் இவற்றுள்அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

கேமரா:
சியோமி நோட் 5 பின்புற கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் எஸ்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
இக்கருவி 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications