நோக்கியாவிற்கு "நேரடியாக" சவால் விடும் சியோமி ரெட்மீ நோட் 5 அம்சங்கள்.!

அதாவது நோக்கியா கருவிகளை போல கிட்டத்தட்ட 'எட்டு-நாள் ஆயுள்' நீடிக்கும் பேட்டரி கொண்டிருக்கும் என்பது வெளிப்பட்டுள்ளது.

|

ஒருகாலத்தில் யாரிடம் கேட்டாலும், நோக்கியா மொபைல் தான் வைத்திருக்கிறேன் என்று கூறுவார்கள். தற்போது அந்த இடத்தை சியோமி ஆக்கிரமித்துக்கொண்டது என்றே கூறலாம். ஐந்தில் மூன்று நண்பர்கள் சியோமி ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார்கள்.!

இந்நிலைப்பாட்டில் மறு அவதாரம் எடுத்துள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மெல்ல மெல்ல இழந்த சந்தையை மீட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் இதர நிறுவனங்கள் மறைமுகமான மற்றும் நேரடியான போட்டியை அதன் முன்வைக்கின்றன.

அப்பட்டமாக.!

அப்பட்டமாக.!

குறிப்பாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் என்ற பெயரை தன்பக்கம் வைத்திருக்கும் சியோமி நிறுவனம், அம்சங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரவிருக்கும் கருவிகளில் சில பிராதன அம்சங்களை இணைப்பதின் வழியே சந்தையை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது, அது சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனில் அப்பட்டமாக தெரிந்தது.

சியோமி ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மே நோட் 4 ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த அமோக வெற்றியின் அடுத்தகட்ட படைப்பு தான் சியோமி ரெட்மீ நோட் 5 - மிக விரைவில் வெளியாகவுள்ள இக்கருவியின் அம்சங்கள் சமீபத்தில் ஆன்லைனில் காணப்பட்டது.

'எட்டு-நாள் ஆயுள்' நீடிக்கும் பேட்டரி.!

'எட்டு-நாள் ஆயுள்' நீடிக்கும் பேட்டரி.!

எம்இடி7/எம்இஇ எனும் குறியீட்டு பெயர்களுடன் சீன தரச்சான்றிதழ் ஆணையமான டிஇஎன்ஏஏ வலைத்தளத்தில் காணப்பட்ட இக்கருவி ஒரு பெரிய அளவிலான பேட்டரியை கொண்டுவருமென அதாவது நோக்கியா கருவிகளை போல கிட்டத்தட்ட 'எட்டு-நாள் ஆயுள்' நீடிக்கும் பேட்டரி கொண்டிருக்கும் என்று வெளிப்பட்ட ரெட்மே 5ஏ-வில் இருப்பது போன்றே ஒரு பெரிய அளவிலான பேட்டரி கொண்டுவரலாம்.!

கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே.!

கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே.!

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், டிஇஎன்ஏஏ பட்டியலின் படி, வரவிருக்கும் இக்கருவி ஒரு 18: 9 விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும். ஆக, ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ அளவிலான 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும்.

இரண்டு வகைகளில்.!

இரண்டு வகைகளில்.!

ஒரு ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும் இக்கருவி இரண்டு வகைகளில் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது: 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு.

ஆண்ட்ராய்டு  7.1.2 நௌவ்கட்.!

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!

துரதிர்ஷ்டவசமாக, கருவியின் சிப்செட் பற்றிய எந்த வார்த்தையும் இல்லை, ஆனால் வதந்திகள் இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 தொடர் எஸ்ஓசி கொண்டிருக்கலாமென பரிந்துரைக்கின்றன. மியூஐ 9 கொண்டு இயங்கும் இக்கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையில் இயக்கப்படலாம்.

12 மெகாபிக்சல் கேமரா.!

12 மெகாபிக்சல் கேமரா.!

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தை (128 ஜிபி வரை) ஆதரிக்கிறது. மேலும் கலப்பு சிம் ஸ்லாட்டையும் ஆதரிக்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், செல்பீக்களுக்கான ஒரு 5 மெகாபிக்சல் கேமராவுடன் இணைந்து பின்பக்கம் ஒரு 12 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்குமென கூறப்படுகிறது.

4000எம்ஏஎச் பேட்டரி.!

4000எம்ஏஎச் பேட்டரி.!

மேலும் இந்த ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாமென பட்டியல் அறிவிக்கிறது. இது ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் 4100எம்ஏஎச் பேட்டரியை விட சற்று சிறியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர்.!

கைரேகை ஸ்கேனர்.!

மேலும் வெளியான தகவல்களின் கீழ் இக்கருவி அதன் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மற்றும் லீக்ஸ் புகைப்படங்களில் கூறப்படும் உருண்டையான மூலைகளும் வடிவமைப்பில் எதிர்நோக்கப்படுகிறது. அளவீட்டில் இந்த கைபேசியில் 158.5x75.4x8 மிமீ மற்றும் 180 கிராம் எடையுள்ளதாக இருக்குமென பட்டியல் குறிப்பிடுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Specifications Leaked: 5.99-Inch Display, 4000mAh Battery, and More. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X