Home
Mobile

பெசல்-லெஸ் டிஸ்பிளே & டூயல் கேமராவுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா மற்றும் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சியல் மி7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு கூடிய விரைவில் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெசல்-லெஸ் டிஸ்பிளே & டூயல் கேமராவுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா, அதற்கு கீழே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பெசல்-லெஸ் டிஸ்பிளே & டூயல் கேமராவுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பெசல்-லெஸ் டிஸ்பிளே & டூயல் கேமராவுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா
மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 renders leaked, tipped to feature 18:9 bezel-less design and dual cameras ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X