ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ: வெறும் ரூ.9,999/- முதல்.!

இன்று இந்த இரு கருவிகளின் முதல் இந்திய விற்பனை நடைபெறுகிறது.

|

சியோமியின் சூப்பர் பட்ஜெட் மற்றும் இடைநிலை பட்ஜெட் கருவிகளான சியோமி ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ பற்றிய அனைத்து வதந்திகளுக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதியன்று, இந்த இரு கருவிகளும் அதிகாரபூர்வமாக வெளியானது.

இன்று இந்த இரு கருவிகளின் முதல் இந்திய விற்பனை நடைபெறுகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி.காம் (mi.com) மற்றும் பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் ஆகியவற்றில் சரியாக மதியம் 12 மணிக்கு விற்கப்படுகிறது.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

முன்னர் வெளியாகி இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் என்ற புகழைப்பெற்ற ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் சிறந்த மாற்றாக ரெட்மீ நோட் 5 திகழும் மறுகையில், ரெட்மீ நோட் 3 ஸ்மார்ட்போனின் ஆத்மீகமான மாற்றாக ரெட்மீ நோட் 5 ப்ரோ திகழுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னணி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிய அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. அது ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் உடனானன் 3 ஜிபி / 4ஜிபி ரேம் முறையில் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது.

பின்புற கேமரா x

பின்புற கேமரா x

இந்த சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை அதன் அட்ரெனோ 506 ஜிபியூ கவனித்து கொள்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/ 2.2 துளை மற்றும் 1.25 லென்ஸ் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும் பின்புற கேமராவானது பிடிஏஎப் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் ஆகியவற்றுக்கான ஆதரவும் கொண்டுள்ளது.

Xiaomi Redmi Note 5 Pro First Impressions (GIZBOT TAMIL)
4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது இதன் இரண்டு கேமராக்களுமே1080பி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைரேகை ஸ்கேனர் ஆனது பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இறுதியாக இந்த தொலைபேசியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு ஆனது ரூ.9,999/-க்கு கிடைக்க, மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.11,999/-க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி +  5எம்பி

12எம்பி + 5எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாறுபாடானது முறையே ரூ.13,999/-க்கும் மீதமுள்ள இரு மாறுபாடுகளும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும். மேலும் பல ஸ்மார்ட்போன் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5, Redmi Note 5 Pro first sale today. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X