ரெட்மீ நோட்5 ப்ரோ vs அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1: இரண்டும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்ல!

|

சியோமி ரெட்மீ நோட்5 ப்ரோ மற்றும் புதிதாக வெளியான அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இரண்டும் ஒரே விதமான அம்சங்களுடன் சந்தையில் நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவை கைப்பற்ற நினைக்கின்றன.

சியோமி ரெட்மீ நோட்5 ப்ரோ vs அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!

சியோமி அறிமுகப்படுத்தியுள்ள ரெட்மீ நோட்5 ப்ரோவில், உயர்தர செயல்திறன், சிறந்த பேட்டரி திறன் மற்றும் நல்ல கேமரா என ஒரு 15000 விலையுள்ள போனில் என்ன இருக்கவேண்டுமோ அனைத்தும் உள்ளது. தற்போது அசுஸ் அறிமுகப்படுத்தியுள்ள சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் இந்த விலைக்கு வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அனைத்தும் உள்ளது. உயரமான திரை, டூயல் கேமரா, அதிக திறனுள்ள பேட்டரி என வசதிகள் உள்ளன . இதில் எந்த போனை வாங்குவது என்ற குழப்பமா? இரண்டையும் ஒப்பீடு செய்த இக்கட்டுரையை படித்து முடிவுசெய்யுங்கள்.

செயல்திறன் மற்றும் சேமிப்புதிறன்

ரெட்மீ நோட்5 ப்ரோ மற்றும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இரண்டும் 1.8GHzல் இயங்கும் குவால்காம் ஸ்னேப்டிராகன் 636 ப்ராசஸ்சர்-ஐ கொண்டுள்ளது. எனவே செயல்திறனில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை.

அசுஸ் போனில் உள்ள நல்ல விசயம் என்னவென்றால், ரெட்மீயை போல ஆண்ராய்டு நவ்கட் இயங்குதளம் இல்லாமல் 8.1 ஓரியோ உள்ளது.

திரை மற்றும் வடிவமைப்பு

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

திரையை பொறுத்தமட்டில், ரெட்மீ நோட்5 ப்ரோ போனில் 5.99 இன்ச் FHD+ IPS LCD யுனிவீசம் திரையும்,ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1ல் 18:9 உயரமுள்ள 6 இன்ச் FHD+ IPS LCD பேனல் திரை உள்ளது.

வடிவமைப்பை பொறுத்தமட்டில் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, 5000mAh பேட்டரி உடன், அனைவரையும் கவரும் திரையும் உள்ளது. ரெட்மீ தனது முந்தைய போன்களை விட நல்ல வடிவமைப்பில் உள்ளது.

கேமரா

ரெட்மீ நோட்5 ப்ரோ ன் முக்கிய கேமரா துல்லியமான, அனைத்து நிறங்களை மீள்உருவாக்கும், அனைத்தும் ஒலி அமைப்பிலும் இயங்கவல்லது. பின்புறம் 12MB+5MP டூயல் கேமராக்களும் , 20MB முன்புற சென்சார் கேமராவும் உள்ளது.

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் கேமரா சிறப்பானது என சொல்லமுடியாவிட்டாலும் மோசமில்லை.

சியோமி ரெட்மீ நோட்5 ப்ரோ vs அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!

பேட்டரி மற்றும் விலை

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ல் உள்ள 5000mAh பேட்டரி மூலம் ஒன்றறை நாட்கள் எளிதாக பயன்படுத்தலாம். மேலும் இது மிக வேகமாக வெறும் 2மணி 30 நிமிடத்தில் சார்ஜ் ஆகக் கூடியது. ரெட்மீ நோட்5ப்ரோ சிறப்பாக செயல்படக்கூடிய 4000mAhபேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மீ நோட்5ப்ரோ, 4GBரேம்/32GB ரோம் உள்ள போனின் விலை ரூ13,999 எனவும்,6GBரேம்/64GB ரோம் உள்ள போனின் விலை ரூ16,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1,3GBரேம்/32GB ரோம் உள்ள போனின் விலை ரூ10,999 எனவும்,4GBரேம்/64GB ரோம் உள்ள போனின் விலை ரூ12,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டு மே3 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ரெட்மீயை ஒப்பிடும் போது இதன் விலை சற்று குறைவாகவே உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Pro vs Asus Zenfone Max Pro M1; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X