தரமான சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!
முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.
சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதை கொண்டாடும் வகையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த
ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
6ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 5 ப்ரோ அம்சங்கள்
இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி + 5எம்பி
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்
வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல்
ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மி நோட் 5 ப்ரோ 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும்
64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.


Click it and Unblock the Notifications