புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ரெட்மி நோட் 5 சீரிஸ்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
காதலர் தினத்தன்று அசத்தலான சியோமி ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22-ம் தேதி இந்த ஸ்மாரட்போன் மாடல்கள் விற்பனை துவங்கி சமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்ததாக சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்பின்பு புதிய ஸ்மார்ட்போன்களுக்கான இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. மேலும் இரண்டு விற்பனைகளிலும் ரெட்மி நோட் 5 ப்ரோ 4ஜிபி ரேம் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் 6ஜிபி ரேம் மாடல் விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அசத்தலான ரோஸ் கோல்டு மற்றும் லேக் புளூ நிறம் கொண்ட ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 7:
ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் வசதியுடன் மார்ச் 7-ம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ரெட்மி நோட் 5 சீரிஸ் நான்கு நிறங்களில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ :
ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


விலை:
ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாறுபாடானது முறையே ரூ.13,999/-க்கும் மீதமுள்ள இரு மாறுபாடுகளும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications