Home
Mobile

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் மிரட்டலான "ரெட் வேரியண்ட்" விற்பனை துவங்கியது.!

இன்று 10 மணி முதல் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் விற்பனை mi.com இல் துவங்குகிறது. இன்றைய விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் புதிய பிரத்தியேக ரெட் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

By Sharath

சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சியோமி அறிவித்த பிளாஷ் சேல்ஸ் இல் அனைத்து ரெட்மி நோட் 5 ப்ரோ-களும் விற்று தீர்த்துவிடட்டது .

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கிடைக்கப்பதென்பது மிகக் கடினம் என்ற நிலை, ரெட்மி நோட் 5 ப்ரோ வெளியான சில நேரத்திலேயே உருவானது. அனைத்து ஸ்டாக்களையும் விற்றுத் தீர்த்து விட்ட சியோமி நிறுவனம் தற்போது மறுபடியும் தனது விற்பனையை mi.com இல் துவங்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை

இன்று 10 மணி முதல் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் விற்பனை mi.com இல் துவங்குகிறது. இன்றைய விற்பனையில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன் புதிய பிரத்தியேக ரெட் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமி வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ரெட் வேரியண்ட் இன் டீஸர் வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெட் வேரியண்ட் ரெட்மி நோட் 5 ப்ரோ

ரெட் வேரியண்ட் ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ரெட் வேரியண்ட் முதன் முதலில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது சியோமி நிறுவனம் இன்று முதல் இந்திய சந்தையிலும் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ரெட் வேரியண்ட ஐ விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விபரக்குறிப்பு:

- 5.99 இன்ச் முழு எச்டி 2160 x 1080 பிக்சல்கொண்ட தொடுதிரை

- குயல்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் ப்ராசஸர்
- 4ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
- 6ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
- சேமிப்பு விரிவாக்கம் 128ஜிபி வரை
- 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் டூயல் கேமரா
- 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ MIUI 9.5
- 4000 என்ஏஎச் பேட்டரி

mi.com அல்லது மி ஸ்டோர்

mi.com அல்லது மி ஸ்டோர்

இந்த அசத்தலான சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ கருப்பு, நீளம், கோல்ட் மற்றும் ரெட் நிறத்தில் இன்று 10 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. உங்கள் புதிய சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்க mi.com அல்லது மி ஸ்டோர்-க்கு உடனே செல்லுங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Pro to go on sale at 10:00AM including RED variant on mi.com : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X