அடேங்கப்பா.. ரூ.15,700/- என்கிற விலையை பெற்றுள்ள ரெட்மீ நோட் 5.!

இந்த 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கபப்படுமென்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

|

கடந்த ஆண்டு வெளியாகி மிகவும் பிரபலமடைந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனின் வாரிசு சாதனம் வெளியிடப்படாது என்பது, இதுவரை வெளியான அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலைப்பாட்டில், அதன் அடுத்த வாரிசு ரெட்மீ நோட் 5 தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அடேங்கப்பா.. ரூ.15,700/- என்கிற விலையை பெற்றுள்ள ரெட்மீ நோட் 5.!

இந்த 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கபப்படுமென்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 செயலி மூலம் இயக்கப்படுகிறது. தற்போது மைடிரைவர்ஸ் வழியாக வெளியானதொரு அறிக்கை சியோமி ரெட்மீ 5 சார்ந்த விலை மற்றும் பிரதான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ரூ.15,700/- என்கிற புள்ளி

ரூ.15,700/- என்கிற புள்ளி

கூறப்படும் சியோமி ரெட்மீ 5 ஆனது இன்டர்னெல் சோதனைகளுக்குள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியான வதந்திகளின்படி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னோடியை விட அதிக விலை நிர்ணயம் கொண்டிருக்கும். அதாவது சுமார் ரூ.15,700/- என்கிற புள்ளியில் இதன் அடிப்படை மாறுபாடு வெளியாகலாம்.

தாமதமாக முக்கிய காரணம்

தாமதமாக முக்கிய காரணம்

வெளியான சமீபத்திய அறிக்கையானது, க்வால்காம் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 632 செயலியை அறிவிக்கவில்லை என்பதால் தான் இக்கருவியின் வெளியீடு தாமதமாக முக்கிய காரணம் என்றும் அறிவித்துள்ளது.

ஸ்னாப்ட்ராகன் 632

ஸ்னாப்ட்ராகன் 632

ஆக, ரெட்மீ நோட் 5 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 செயலுக்காக வெளிப்படையாக காத்திருப்பதை அறியமுடிகிறது. இருப்பினும் ஸ்னாப்ட்ராகன் 632 ஆனது, க்வால்காம் ஸ்பெக்ட்ரா 160 ஐஎஸ்பி மோடத்தை தக்கவைத்துள்ளது, இது இரட்டை கேமரா அமைப்புகளுக்கு உகந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5.99 அங்குல முழு எச்டி ப்ளஸ்

5.99 அங்குல முழு எச்டி ப்ளஸ்

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், மியூஐ 9 கொண்டு ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்க வேண்டும். மேலும் இந்த தொலைபேசி ஒரு 5.99 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x2160 பிக்ஸல்) டிஸ்பளேவை, 18: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டிருக்கும்.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

ஆகமொத்தம் வெளியான மைடிரைவர்ஸ் அறிக்கை படி, இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு ஆகிய இரண்டு வகைகளில் வெளியாகும்.

இந்திய வெளியீடு

இந்திய வெளியீடு

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுவருமென கூறப்படுகிறது. முன்பக்கத்தில் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இந்திய வெளியீடு சார்ந்த விவரங்கள் இன்னும் வரவில்லை. இருப்பினும் வெளியான ஓரிரு வாரங்களுக்குள் இந்திய சந்தைக்குள் வெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Price, Specifications Leaked; Said to Be in Internal Testing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X