4000எம்ஏஎச்; நம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலை - மிரட்டும் ரெட்மீ நோட் 5.!

வெளியான கிஸ்மோ சீனாவின் அறிக்கையின்படி, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது 699 யுவான் என்கிற விலைப்புள்ளியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயத்தை ப

|

சியோமி ஒரு புதிய ரெட்மீ சாதனத்தில் வேலை. செய்கிறதென்பதை நாம் அறிவோம். அது ரெட்மீ நோட் 5 ஆக இருக்குமென்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த சில வாரங்களில் ரெட்மீ நோட் 5 சாதனத்தின் பல கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியாகின.

4000எம்ஏஎச்; நம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலை- மிரட்டும் ரெட்மீ நோட் 5

நேற்று வெளியான லீக்ஸ் புகைப்படமானது ரெட்மீ நோட் 5-ன் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை வெளிப்படுத்தியது. இன்று வெளியான தகவல் அதன் விலை நிர்ணயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விலைப்புள்ளி உண்மையானால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரெட்மீ நோட் 5-க்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு.

ரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயம்

ரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயம்

வெளியான கிஸ்மோ சீனாவின் அறிக்கையின்படி, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது 699 யுவான் என்கிற விலைப்புள்ளியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,800/- என்கிற நம்பமுடியாத விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

அச்சுப்பிழையாக இருக்கக்கூடும்.?

அச்சுப்பிழையாக இருக்கக்கூடும்.?

இருப்பினும், அதே கிஸ்மோ சீனா அறிக்கையானது இதுவொரு அச்சுப்பிழையாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது சியோமி ரெட்மீ நோட் 5ஏ என்பதற்கு பதிலாக ரெட்மீ நோட் 5 என்ற பிழை உருவாகியிருக்கலாமென்று விளக்கமளிக்கிறது.

5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

கடந்த நவம்பர் மாதம் ஒப்போமார்ட் வலைத்தளத்தில் ரெட்மீ நோட் 5 காணப்பட்டது. அந்த பட்டியல் கூறப்படும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியது. அதன்படி, ரெட்மீ நோட் 5 ஆனது 2199 x 1080 என்கிற பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்கும்.

3 ஜிபி / 4 ஜிபி ரேம்

3 ஜிபி / 4 ஜிபி ரேம்

இதன் பொருள் இந்த தொலைபேசி கிட்டத்தட்ட ஒரு எட்ஜ் டூ எட்ஜ் திரை கொண்டுவருமென்று அர்த்தம். மேலும் கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி உடனான 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபிஅளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இணைக்கப்பட்டுருக்கும். முன்னர் வெளியான தகவலொன்றின் கீழ் இக்கருவி ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் மூலம் இயக்கப்படும்.

4,000 எம்ஏஎச் பேட்டரி

4,000 எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். ஒளியியலை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி ரியர் கேமராவும், ஒரு 5 எம்பி செல்பீ கேமராவும் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓரியோ

முன்னர் இலியானா வதந்திகள், ரெட்மீ நோட் 5 ஆனது அதன் பின்புறத்தில் 16எம்பி + 5எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டு வருமென்றும், ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டிருக்குமென்றும் பரிந்துரைத்தன. ஆனால் இந்த சியோமி சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இரண்டு சிப்செட் வகை

இரண்டு சிப்செட் வகை

எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது இரண்டு சிப்செட் வகைகளில் - அதாவது இந்தியா போன்ற சந்தைகளுக்கு க்வால்காம் மற்றும் சீன சந்தைகளுக்கு மீடியா டெக் செயலி கொண்டு - அறிமுகப்படுத்தலாம் என்ற வார்த்தைகளும் உள்ளன. மேலும் பல சுவாரசியமான சியோமி ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 price leaked, could be priced under Rs 7000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X