இந்திய சந்தையின் அடுத்த "பெஸ்ட் செல்லிங்" ஸ்மார்ட்போன் இதுதான்.!

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் பின்னால் ஒரு ஒற்றை 12 மெகாபிக்சல் கேமராகொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

|

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளியாகும் வதந்திகளின் மூலமாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் வெளியீடு நெருங்குகிறது என்று சொல்லவதில் எந்த தவறும் இல்லை.

இந்திய சந்தையின் அடுத்த

இருப்பினும், அடுத்த சியோமி பற்றிய எந்த விதனான உத்தியோகபூர்வ வார்த்தைகளும் இல்லை. அதனாலேயே அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக, வரவிருக்கும் பிரபலமான ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் அடுத்த அப்டேட் ஆன ரெட்மீ நோட் 5 பற்றி அடுத்தடுத்த கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

பெஸல்லெஸ்

பெஸல்லெஸ்

கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே லீக்ஸ் புகைப்படங்களின் வழியாக கசிந்துள்ள நிலைப்பாட்டில், இப்போது மேலுமொரு ஆன்லைன் லீக்ஸ் வழியாக அதன் முழு அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. வெளியான தகவலின்படி, வரவிருக்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு பெஸல்லெஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

ஸ்னாப்டிராகன் 625 செயலி

ஸ்னாப்டிராகன் 625 செயலி

சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் காணபட்டுள்ள ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்களில் இருந்து எதிர்வரும் தொலைபேசியானது எப்படி இருக்கும் என்ற தோராயமான யோசனையை நம்மால் பெற முடிகிறது. குறிப்பாக, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது நோட் 4 பயன்படுத்திய அதே செயலி பயன்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டு இயங்கலாம்.

இடையே வேறுபாடுகள்

இடையே வேறுபாடுகள்

இதுமட்டுமின்றி வன்பொருள் அடிப்படையிலும் ரெட்மீ நோட் 5 ஆனது ரெட்மீ 4 போன்றே தான் இருக்கும் என்பதையும் இந்த லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. எனினும், பெரும்பாலான அம்சங்களில் ஒற்றுமைகள் மிகவும் குறைவாக இருக்கும் மற்றும் இரண்டு தொலைபேசிகளுக்கு இடையே வேறுபாடுகள் இன்னும் அதிகாமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

குறிப்பாக, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் பிரதான மாற்றத்தை அதன் முன்னணி டிஸ்பிளேவில் காணமுடிகிறது. லீக்ஸ் தகவலின்படி, நோட் 5 ஆனது 18: 9 என்ற விதிரை கிதத்தில் ஒரு பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் வரும் மேலுக்கும் முழு எச்டி+ தீர்மானம் கொண்ட 5.99-இன்ச் என்கிற திரை அளவை கொண்டிருக்கும்.

64ஜிபி உள்ளடக்க சேமிப்பு

64ஜிபி உள்ளடக்க சேமிப்பு

சேமிப்பு, ரேம் மற்றும் பிற விவரங்கள் என்று வரும்போது, ரெட்மீ நோட் 5 ஆனது 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக சேமிப்பிட இடத்தை மேலும் விரிவாக்க முடியுமா, எந்த அளவிலான மெமரி நீட்டிப்பை செய்யலாமென்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

ஆண்ட்ராய்டு  7.1.2 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் பின்னால் ஒரு ஒற்றை 12 மெகாபிக்சல் கேமராகொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். தவிர ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் உடன் சேர்ந்து வர அதிக வாய்ப்புள்ளது. ஓரியோ அப்டேட் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

மேலும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னோடியை போலவே பவர் பேக் ஸ்மார்ட்போனாக இருக்குமென்பதால் எந்த சந்தேகமுமில்லை. சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் காணபட்டுள்ள ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு பெரிய பேட்டரி ஆயுள் வழங்கும் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுவருமென்று குறிப்பிட்டுள்ளதே அதற்கு சாட்சி.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 live images show off 18:9 bezel-less screen, full specs leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X