இது மட்டும் நிஜமானால்.. ஆளுக்கொரு ரெட்மீ நோட் 5 பார்சல்.!

வெளியான வீடியோவானது மிகவும் அதிர்ச்சிக்குரிய வடிவமைப்பை காட்சிப்படுத்துகிறது. ஏனெனில் கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 பற்றிய எந்தவிதமான வார்த்தையையும் வெளியாகமல் இருந்த நிலைப்பாட்டில் தற்போது ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் புதிய கான்செப்ட் வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

இது மட்டும் நிஜமானால்.. ஆளுக்கொரு ரெட்மீ நோட் 5 பார்சல்.!

வெளியான வீடியோவானது மிகவும் அதிர்ச்சிக்குரிய வடிவமைப்பை காட்சிப்படுத்துகிறது. ஏனெனில் கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும், ஆனால் வெளியான கான்செப்ட் வீடியோவில் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது.

கிட்டத்ட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு

கிட்டத்ட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு

வெளியான வீடியோவில் காணப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது அதன் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மிகவும் குறைவான அளவிலான பெஸல்களையே கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பானது கிட்டத்ட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டு வருமென அறிவித்த சமீபத்திய அறிக்கையுடன் ஒற்றுப்போகிறது.

நம்பமுடியாத வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

நம்பமுடியாத வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

இதன் முன்பக்கத்தில் உள்ள பெஸல்கள் ஆனது நிச்சயமாக ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட குறைவாகத்தான் இருக்குமென்ற எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இது தொலைபேசியின் முன்பக்கம் ஒரு நம்பமுடியாத வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்த வேண்டும்

இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்த வேண்டும்

ஆனால் பின்பக்கத்தை பொறுத்தமட்டில், ​​தொலைபேசியானது அதே ரெட்மீ 4 ஸ்மார்ட்போனின் தோற்றத்தையே கொண்டுள்ளது. இருப்பினும் நீங்கள் இதில் காணக்கூடிய மிகப்பெரிய மாற்றமானது அதன் இரட்டை கேமரா அமைப்பு ஆகும். இதுவரை வெளியான அனைத்து வதந்திகளுமே சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளன.

How to Find a domain easily for your business (TAMIL)
அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல

அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல

வெளியான கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் அண்ட் நாலேஜ் எனும் யூட்யூப் சேனல் ந்த வீடியோவை உருவாக்கியுள்ளது. ஆனால் இதுவொரு பேன்-மேட் வீடியோ என்பதையும், சியோமி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

எட்ஜ் டூ எட்ஜ் திரை

எட்ஜ் டூ எட்ஜ் திரை

அம்சங்களை பொறுத்தமட்டில் ரெட்மீ நோட் 5 காஆனது 2199 x 1080 என்கிற பிக்சல் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட (அதாவது ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே) ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்கும். ஆக கிட்டத்தட்ட ஒரு எட்ஜ் டூ எட்ஜ் திரை கொண்டுவருமென்று அர்த்தம்.

எஸ்ஓசி

எஸ்ஓசி

மேலும் கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 மற்றும் 636 ஆகிய இரண்டு சிப்செட் வகைகளில் வெளியாகலாம். உடன் 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபிஅளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுருக்கலாம். மேலும், சியோமி நிறுவனமானது க்வால்காம் நிறுவனத்தின் 632 எஸ்ஓசி சிப்செட்டிற்காகத்தான் காத்திருக்கிறது என்றும் வதந்திகள் உள்ளன.

கேமரா

கேமரா

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 4,100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம். ஒளியியலை பொறுத்தமட்டில், ஒரு 16எம்பி என்கிற முதன்மை ரியர் கேமராவுடன் ஒரு 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்கும்

நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்கும்

சியோமி நிறுவனம் ஒரு புதிய ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது மற்றும் இந்த நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்குமென்று நம்பலாம். வெளியான லீக்ஸ் வடிவமைப்பில், ஒரு மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ரெட்மீ நோட் 5 வெளியானால் சந்தையில் கிடைக்கும் இதர அனைத்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் இது கொல்லும் என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Concept Renders Reveal Extremely Thin Bezels on the Front. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X