வேறென்ன வேணும்.! ரூ.9700/-க்கு டூயல் கேம்; 4000எம்ஏஎச் கொண்ட ரெட்மீ நோட் 5.?

This recent post confirms the key specifications of the upcoming affordable best seller from the stable of Xiaomi.

|

சியோமி ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 5 சாதனத்தை இந்த 2017-ஆம் ஆண்டுக்குள், சூப்பர் பட்ஜெட் பிரிவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாய் தெரிகிறது.

கடந்த ஆண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கிய ரெட்மீ 4 ஸ்மார்ட்போனிற்கு அடுத்தபடியாக சிறந்த விற்பனை ஸ்மார்ட்போனாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படும் ரெட்மீ நோட் 5 சார்ந்த செய்திகள் கடந்த மாதங்களில் சில முறை மட்டுமே வெளியாகியுள்ள நிலைப்பாட்டில் சமீபத்திய தகவலொன்று ரெட்மீ நோட் 5 மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும்படி உள்ளது.

நிலையான மற்றும் மலிவான

நிலையான மற்றும் மலிவான

விபோ (Weibo) வலைத்தளம் வழியாக கசிந்துள்ள இந்த சமீபத்திய லீக்ஸ் அம்சங்களில் தகவலில் இருந்து, சியோமி நிறுவனத்திடம் இருந்த நிலையான மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதியாகியுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

விபோ இடுகையின்படி சென்றால், ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி 1080பி டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் ஒரு 16என்எம் ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ பி25 எஸ்ஓசி பயன்படுத்தபடலாம்.

இரண்டு மாதிரி

இரண்டு மாதிரி

சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளில் - 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு இடம் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு - வெளியாகலாம்.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

ரெட்மீ நோட் 5 ஆனது 16எம்பி மற்றும் 5எம்பி உணரிகள் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பும், வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீக்களுக்கான 12எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

4000எம்ஏஎச் பேட்டரித்திறன்

4000எம்ஏஎச் பேட்டரித்திறன்

இதற்கு முன்னர் வெளியான தகவலில், இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட மியூஐ9 கொண்டு இயங்கும் உடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகிய பிராதன அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி

சியோமி நிறுவனம் பொதுவாகவே, மீடியா டெக் செயலிகளை அல்லாமல் க்வால்காம் சிப்செட்களை கொண்ட கருவிகளை தான் இந்தியாவில் தொடங்குகிறது. எனவே ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்ட ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

மலிவான விலை நிர்ணயம்

மலிவான விலை நிர்ணயம்

கூறப்படும் சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது புதிதாக அறிவிக்கப்பட்ட நோட் 5ஏ சாதனத்தை விட ஒப்பீட்டளவில் மேம்படுத்தப்பட்ட மாறுபாடாக இருக்கும். முக்கியமாக ரெட்மீ வரிசையில் வெளியான மலிவான விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.

சுமார் ரூ.9,700/-க்கு

சுமார் ரூ.9,700/-க்கு

அதாவது, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாதிரியான 3ஜிபி ரேம் மாறுபாடானது 999 யுவான் (சுமார் ரூ.9,700/-க்கு) என்ற விலை நிர்ணயம் கொண்டு வரலாம். மறுகையில் இதன் பெரிய மாறுபாடானது 1299 மற்றும் 1699 என்பதற்கு இடையில் ஏதாவது ஒரு விலை நிர்ணயப்புள்ளியை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 to arrive with Helio P25 SoC and dual rear cameras; to be priced from Rs. 10,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X