Home
Mobile

சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் (விலை & அம்சங்கள்) இன்று அறிமுகம்.?!

சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் அக்கருவி இன்று (பிப்ரவரி 8) அறிமுகமாகும், உடன் கருவியின் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்கியுள்ளது சமீபத்திய லீக்ஸ்.!

By Muthuraj

இந்தியாவில் சியோமி ரெட்மீ கருவிகள் மீது நல்ல வரவேற்பு கிடைக்க முக்கிய காரணமாக அதன் வடிவமைப்பு மற்றும் பட்ஜெட் விலையிலான அற்புதமான அம்சங்களே முக்கிய காரணமாகும். ரெட்மீ கருவிகள் கொண்டிருக்கும் அதே அம்சங்களை கொண்ட கருவிகள் சுமாரான வடிவமைப்பில் சற்று அதிக விலையில் கிடைக்க வாடிக்கையாளர்கள் ரெட்மீ கருவிகளையே அதிகம் தேர்வு செய்கின்றன.

இதையெல்லாம் நன்கு அறிந்த சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ கருவிகளை இந்தியாவில் மேலும் பிரபலமாக்க ஒருபோதும் தவறியதில்லை. அப்படியாக, சியோமி நிறுவனத்தின் ரெட்மீ வரிசையில் ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.

இன்று அறிமுகம்.?

இன்று அறிமுகம்.?

அதன் அடிப்படையில் சமீபத்தில் வெளியான லீக்ஸ் தகவல் ஒன்று சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் அக்கருவி இன்று (பிப்ரவரி 8) அறிமுகமாகும் என்று அறிவிக்கிறது உடன் கருவியின் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்கியுள்ளது.

புதிய நிற மாறுபாடு

புதிய நிற மாறுபாடு

முந்தைய கசிவின்படி சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவியானது பிப்ரவரி 8 அன்று வெளியாகும் என்பது போல எந்த தகவலும் கிடையாது. அந்த தகவல் ஆனது ரெட்மீ நோட் 4எக்ஸ் பதிப்பில் எந்த விதமான வடிவமைப்பு மாற்றமும் இல்லை என்பதை கூறி ஒருவேளை ஒரு புதிய நிற மாறுபாடு வெளிவரலாம் என்பதை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தது.

ப்ளேபுல்ட்ராய்டு

ப்ளேபுல்ட்ராய்டு

ஆனால், இப்போது 'ப்ளேபுல்ட்ராய்டு' வெளியிட்டுள்ள கவு புகைப்படத்தில் இருந்து அழகான சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவியின் உள் மேம்படுத்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.

ஒரிஜினல் வேரியண்ட்

ஒரிஜினல் வேரியண்ட்

வெளியான புகைப்படம் கருப்பு வண்ணத்துடன் இணைந்த ஒரு புதிய பசுமை நிற மாறுபாடு பதிப்பை வெளிப்படுத்துகிறது. உடன் ஒரிஜினல் வேரியண்ட் போன்றே கேமரா, கைரேகை, மேல் மற்றும் கீழ் தாடை ஆண்டெனா வரிகள் கொண்டுள்ளதையும் வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் இருப்பது ஒரு ரெட்மீ 4 கருவிதான் என்று தான் சிலர் கூறினாலும் அதை நிரூபிக்க முடியவில்லை.

டிஸ்ப்ளே, ரேம்

டிஸ்ப்ளே, ரேம்

மேலும் அம்சங்கள் சார்ந்து கிடைத்த தகவல்களை பொறுத்தவரை இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஒரு 2ஜிகாஹெர்ட்ஸ் டீகா-கோர் சிபியூ மூலம் இயக்கப்படும். உடன் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மாறுபாடு வெளியீட்டை காணலாம். முன்னதாக வெளியான சியோமி ரெட்மீ 4எக்ஸ் லீக்ஸ் தகவலின் கீழ் இக்கருவி 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடாக வெளிவரலாம் என்று தெரிவிக்கின்றன.

சேமிப்பு

சேமிப்பு

கருவியின் உள்ளடங்கிய சேமிப்பு வகைகளை பொறுத்தவரை 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி வகைகளை கொண்டிருக்கலாம் மற்றும் 32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீடிக்கும் ஆதரவும் கொண்டிருக்கலாம்.

கேமரா, பேட்டரி

கேமரா, பேட்டரி

கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்கலாம் உடன் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி, ஒரு கைரேகை சென்சார் அளவீடுகளில் 151x76.3x8.54மிமீ, 176.54 கிராம் எடையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இந்த கருவி இப்போது சீனாவில் மட்டுமே வெளியாகிறது பிற சர்வதேச சந்தைகளில் எப்போது வந்தடையும் என்ற தெளிவு இல்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4X Launch Set for Today; Render Image Leaks. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X