Home
Mobile

அறிமுகம் : சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் ஹட்சுனி மிக்கு.!

பார்க்கவே செம்ம 'க்யூட்' ஆக இருக்கும் இக்கருவி வேறென்ன வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறது மற்றும் இக்கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.?

By Muthuraj

இன்று காலை முதலே ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் புதிய கருவியொன்றை அறிமுகம் செய்யும் மற்றும் அந்த கருவி சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் ஆக இருக்கும் என்ற லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதை அப்படியே நிரூபித்தது சியோமி நிறுவனம். அதாவது அதன் ரெட்மீ வரிசையில் நோட் 4எக்ஸ் கருவியின் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பார்க்கவே செம்ம 'க்யூட்' ஆக இருக்கும் இக்கருவி வேறென்ன வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறது மற்றும் இக்கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

அறிமுகம்

அறிமுகம்

சியோமி சீனாவில் அதன் ரெட்மீ நோட் நோட் 4எக்ஸ் ஹட்சுனி மிக்கு ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் இந்தியாவில் வெளியான ரெட்மீ நோட் 4 போன்றே அம்சங்கள் கொண்டுள்ளது.

வண்ண விருப்பம்

வண்ண விருப்பம்

இந்த சிறப்பு பதிப்பானது காம்பைன் கோல்ட், பிளாட்டினம் சில்வர், மேட் பிளாக், செர்ரி பின்க் மற்றும் ஹட்சுனி க்ரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இக்கருவியின் விற்பனையானது காதலர் தினம் அதவாது பிப்ரவரி 14-ஆம் தேதி சீனாவில் தொடங்கும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

குறிப்புகள் அடிப்பைடயில் சியோமி ரெட்மீ 4எக்ஸ் ஆனது 2.5டி வளைந்த கண்ணாடி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி 1080பி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உடன் இந்த சாதனம் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 ப்ராஸசர் உடனான 2ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயங்குகிறது.

சேமிப்பு

சேமிப்பு

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியையும் வழங்கும்.

கேமரா

கேமரா

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான மியூஐ 8 மூலம் இயங்கும் இக்கருவிசியோமி ரெட்மீ நோட் 4 கருவி போன்றே இரட்டை டோன், எல்இடி ப்ளாஷ், பிடிஏஎப் மற்றும் எப்/ 2.0 துளை கொண்ட ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் 85-டிகிரி அளவு கோண லென்ஸ் மற்றும் எப் / 2.0 துளை கொண்ட ஒரு 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

விலை

விலை

இப்போது வரையிலாக இந்த சியோமி ரெட்மீ 4எக்ஸ் சிறப்பு பதிப்பின் விலை மற்றும் எப்போது இக்கருவி உலகளவில் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

பேட்டரி

பேட்டரி

உடன் இக்கருவியில் ஒரு அகச்சிவப்பு சென்சார் மற்றும் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு வசதிகள் அடிப்படையில் ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட், ஹைப்ரிட் டூவல் சிம் மற்றும் ப்ளூடூத் 4.1கொண்டு வருகிறது. பேட்டரி திறனை பொறுத்தம்மட்டில் 4100எம்ஏஎச் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : இந்தியாவின் முதல் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட பீச்சர் போன்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4X Hatsune Miku Special Edition smartphone announced. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X