சியோமி ரெட்மி நோட்4 பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் கிடைக்கிறது.

Written By:

சியோமி ரெட்மி நோட்4 பலதொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும் இவை கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும். இவை மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சியோமி ரெட்மி நோட்4 பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் வாங்க தற்போது அதிக வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமக்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

சியோமி ரெட்மி நோட்4 பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.!

சியோமி ரெட்மி நோட்4, 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. சியோமி ரெட்மி நோட்4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சியோமி ரெட்மி நோட்4 பொருத்தவரை ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 625 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது. மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி நோட்4 பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

சியோமி ரெட்மி நோட்4விலைப் பொருத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.9,999 ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.10,999 ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.12,999 ஆக உள்ளது.

Read more about:
English summary
Xiaomi Redmi Note 4 Up for Grabs via Flipkart and Mi.com : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot