சியோமி ரெட்மீ நோட் 4 : ரூ.9,999/-க்கு இந்தியாவில் அறிமுகம்.!
எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில் கிடைக்கிறது மற்றும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.?
சியோமி இந்தியா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) 2017-ஆம் ஆண்டின் முதல் அக்கருவியான சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மூன்று வகைகளில் ரெட்மீ நோட் 4 அக்கருவி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் இன்று 12 மணி முதல் பிரத்தியேகமாக கிடைக்கும் மி.காம் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். இந்தியாவில் தங்கம், சாம்பல் மற்றும் வெள்ளி நிற வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் புதிய மேட் கருப்பு வண்ணம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில் கிடைக்கிறது மற்றும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

எந்தெந்த மாறுபாடுகள் என்னென்ன விலையில்
சியோமி ரெட்மீ நோட் 4 கருவி இந்தியாவில் மூன்று வகைகளில் கிடைக்கும் : 2ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.9,999/-க்கும், 3ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது ரூ.10,999/-க்கும், 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மாதிரியானது ரூ.12,999/-க்கும் கிடைக்கிறது. அனைத்து மூன்று வகைகளுமே திங்கள் முதல் விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்காக எந்த விதமான முன் பதிவும் தேவையில்லை.

ஆண்ட்ராய்டு
இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே
ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா
கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்
இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி
இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது

கைரேகை ஸ்கேனர்
தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.


Click it and Unblock the Notifications