குவியுது ஆர்டர்.. Redmi-ன் செக்கச்சிவந்த போன்.. தள்ளுபடியுடன் குறைந்த விலை.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே..
சியோமி (Xiaomi) நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் எடிஷன் (Redmi Note 13 Pro Scarlet Red Edition) என்ற ஸ்மார்ட்போன் மாடலை கோலாகலமாக அறிமுகம் செய்துள்ளது. இந்தியா ரசிகர்களை கவர்ந்த செக்கசெவந்த சாதனமாக இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் எடிஷன் சாதனம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த புதிய சியோமி ரெட் நிற வேரியண்ட் மாடலில் விலை என்ன? இதன் விற்பனை எப்போது? இதை இந்தியாவில் எங்கிருந்து வாங்கலாம் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரெட்மி நோட் 13 ப்ரோ சாதனத்தை ஆர்க்டிக் ஒயிட் (Arctic White), கோரல் பர்பிள் (Coral Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி நிறுவனம் கடந்த வாரம் இதே ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை ஆலிவ் கிரீன் (Olive Green) நிறத்திலும் கூட அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் (Xiaomi Redmi Note 13 Pro Scarlet Red):
இந்த 3 வண்ண மாடல்களும் உலக சந்தைகளில் சியோமி அறிமுகப்படுத்தியது. இந்த நிறங்களை தவிர, தற்போது ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் புதிய ஸ்கார்லெட் ரெட் (Scarlet Red) என்ற புதிய நிறத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ரெட்மி நோட் 13 ப்ரோ வரிசையில் 4வது நிறமாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் சாதனம் மக்களை ஈர்த்துள்ளது.
இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் (Xiaomi Redmi Note 13 Pro Scarlet Red) போனின் விவரக்குறிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 13 ப்ரோவின் அதே அம்சங்களை தான் இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் மாடலும் பெறுகிறது. இது 6.67" இன்ச் கொண்ட 1.5K 120Hz OLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது Samsung ISOCELL HP3 சென்சார் உடன் கூடிய OIS ஆதரவு கொண்ட 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் 200MP பின்புற கேமராவை வழங்குகிறது. முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை வழங்கியுள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்கார்லெட் ரெட் விலை (Xiaomi Redmi Note 13 Pro Scarlet Red Price):
சமீபத்தில் ஹைப்பர் ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 14 புதுப்பிப்பைப் பெற்றது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP54 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இது AG மேட் கிளாஸ் பின்புற பேனல் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 3000 தள்ளுபடியுடன் அமேசான், பிளிப்கார்ட், மற்றும் சியோமி சில்லறை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது.
Redmi Note 13 Pro Scarlet Red Edition விலை பற்றி பேசுகையில், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ. 24,999 என்ற விலையும் மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 26,999 விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஜூன் 25 முதல் mi.com, Flipkart, Amazon.in மற்றும் Xiaomi சில்லறை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 200MP கேமரா வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications