Home
Mobile

Xiaomi சைலன்ட் சம்பவம்.. பட்ஜெட் விலை.. 200MP கேமரா.. சத்தமே இல்லாமல் வரும் புது பவர்புல் Mobile.. எந்த மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் (Smartphone) வரிசையில் புதிதாக ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) என்ற ஸ்மார்ட்போன் மாடலை புத்தம் புதிய கவர்ச்சிகரமான நிறத்தில் (New colour) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலை கடந்த ஜனவரி 2024 இல் அறிமுகம் செய்ததென்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் பச்சை நிறத்தில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ என்ற பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனம் மீண்டும் இந்திய சந்தைக்குள் புதிய நிறத்துடன் கால் பதிக்கவுள்ளது. இதற்கு முன்பு, ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் மிட்நைட் பிளாக் (Midnight Black), ஆர்டிக் வைட் (Arctic White) மற்றும் கோரல் பர்பிள் (Coral Purple) நிறங்களுடன் வெளிவந்தது.

Xiaomi சைலன்ட் சம்பவம்.. பட்ஜெட் விலை.. 200MP கேமரா.. புது Mobile..

ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro):

இப்போது வெளியான டிப்ஸ்டர் சுதன்சன் தகவல் படி, ரெட்மி நோட் 13 ப்ரோ க்ரீன் (Redmi Note 13 Pro Green) நிறத்தில் வெளிவரவுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிறத்தின் சரியான மற்றும் அதிகாரப்பூர்வ கலர் பெயர் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது சேஜ் (Sage) அல்லது ஆலிவ் க்ரீன் (Olive Green) போன்ற நிறத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறத்தின் மாற்றத்தை தவிர புதிதாக வரவிருக்கும் ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கமான ரெட்மி நோட் 13 ப்ரோ போனின் அம்சங்களை அப்படியே பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சம் பற்றி பேசுகையில், இது 6.67" இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேவை (Display) FHD+ உடன் வழங்குகிறது.

இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் 1800 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) உடன் இயங்குகிறது. இது 12GB ரேம் (RAM) உடன் 256GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை பெறுகிறது. இது 200MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

சைலன்ட்டாக சம்பவம் செய்யும் Xiaomi.. பட்ஜெட் விலையில் 200MP கேமராவுடன் புது பவர்புல் மொபைல்:

இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) சாதனம் 5100mAh பேட்டரி (Battery) 67W வயர்டு சார்ஜிங் உடன் வருகிறது. இதன் ஆரம்ப மாடல் 8GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ. 24,999 என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. சியோமி (Xiaomi) நிறுவனம் இதே விலையில் இந்திய சந்தையில் அதன் புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ க்ரீன் (Redmi Note 13 Pro Green) சாதனத்தை விற்பனை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 13 Pro Green Launching Soon In India With 200MP Camera Under Rs 24999 Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X