Home
Mobile

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ரெட்மி நோட் 11டி ப்ரோ சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ.!

ரெட்மி நோட் 11டி ப்ரோ

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உட்பட பல சிறப்பான அம்சங்கள் உள்ளதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ.!

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். அதேபோல் இந்த புதிய ரெட்மி நோட் 11டி ப்ரோ மாடல் ரூ.18000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பவர்

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ.!

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் மாடல்.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன்.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ.!

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5. ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி 10 பவர். மேலும் இந்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 11T Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X