இந்த நாள் குறிச்சு வச்சுக்கோங்க: சியோமி ரெட்மி நோட் 10 எஸ் அறிமுக தேதி!

|

ரெட்மி நோட் 10 எஸ் மே 13 அன்று இந்தியாவில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 எஸ்

ரெட்மி நோட் 10 எஸ்

ரெட்மி நோட் 10 எஸ் கடந்த மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது. ரெட்மி நோட் 10 எஸ் மே 13 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி டுவிட் செய்துள்ளது. வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளுடன் ஆன பாக்ஸ் புகைப்படத்தை நிறுவனம் வெளியிட்டது. கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளுடன் இது மாடல் ஒத்துப்போகிறது., அதன் விவரங்களை பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 தொடர்

ரெட்மி நோட் 10 தொடர்

சியோமி முன்னதாக இந்தியாவில் ரெட்மி நோட் 10 தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அது ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் ரெட்மி நோட் 10 எஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் டிஸ்ப்ளே, ஹை-ரெஸ் ஆடியோ

சூப்பர் டிஸ்ப்ளே, ஹை-ரெஸ் ஆடியோ

ரெட்மி நோட் 10 எஸ் மே 13 அன்று இந்தியாவில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் குறித்து டீஸ் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் புகைப்படத்தை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதன்மூலம் அறியப்பட்ட தகவலின்படி, இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, எம்ஐயூஐ 12.5இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, டார்க் ஆஷ், வைட் என்ற மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. கேமிங் சாதனம் என மையமாக வைத்து இது டீஸ் செய்யப்பட்டுள்ளது. விவரக்குறிப்புகள் பொறுத்தவரை இது சூப்பர் டிஸ்ப்ளே, ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவுகளோடு வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 எஸ் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ரூ.12,449 என்ற விலைப்பிரிவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் வரும் எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என வேரியண்ட்களில் வரும் என கசிவு தகவல் தெரிவிக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் எம்ஐயூஐ 12.5

அதேபோல் இதன் கூடுதல் விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் எம்ஐயூஐ 12.5 உடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED பஞ்ச் துளை டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும்.

64 மெகாபிக்சல் கேமரா

64 மெகாபிக்சல் கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவும் இருக்கிறது. கூடுதலாக ஏஐ ஃபேஸ் அன்லான் அம்சம் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
xiaomi Redmi Note 10S Launching Date Announced in India From Official Twitter Page

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X