ஸ்னாப்டிராகன் 750 SoC உடன் வருகிறதா ரெட்மி நோட் 10?-எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

|

சியோமி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத புதிய ஸ்னாப்டிராகன் 750 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யும் முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அடுத்த தலைமுறை நோட் 10 தொடர்

அடுத்த தலைமுறை நோட் 10 தொடர்

சியோமி ரெட்மி நோட் 9 தொடர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சில ஆன்லைன் தகவலின்படி ரெட்மி நோட் 9-க்கு பிறகு அடுத்த தலைமுறை நோட் 10 தொடர் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நோட் 10 தொடர் உருவாக்கப் பணியில் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் அம்சம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் அம்சம்

ரெட்மி நோட்10 தொடர் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் அம்சம் மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 10: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை சியோமி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நடுவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் சில கசிந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கின்றன. லீக்கான தகவல் உண்மையெனில் இந்த சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை

அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு அல்லது அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சில கசிவுத் தகவலின்படி, மாடல் எண் M2007J17C உடன் MI10T ரெட்மி நோட் 10 ஆக சீனாவிற்கு வரும் என கூறப்படுகிறது.

ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!

4,820 எம்ஏஎச் பேட்டரி

4,820 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,820 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த சாதனத்தின் கேமரா மற்றும் காட்சி குறித்து எந்த தகவலும் இல்லை.

சியோமி எந்த தகவலையும் வெளியிடவில்லை

சியோமி எந்த தகவலையும் வெளியிடவில்லை

இந்தியாவிலும் சீனாவிலும் ரெட்மி நோட் 10 எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து சியோமி எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சாதனங்கள் அக்டோபரில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த சாதனம் குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் இதன் அறிமுகத் தேதி மற்றும் அம்சங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு

வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு

ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன, ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ். அதன் பின் ரெட்மி நோட் 9 தொடர் மாடல்கள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ஓபன் சேல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு அதன் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 10 May Launch With Snapdragon 750 Soc: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X