அடுத்தடுத்த அறிவிப்பு: இப்போ ரெட்மி நோட் 10 குறித்த தகவல்!

|

ரெட்மி தனது புதிய மாடல் ஸ்மார்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரெட்மி நோட் 10 ஆக இருக்கலாம் எனவும் அதுகுறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

ரெட்மி புதிய மாடல்

ரெட்மி புதிய மாடல்

ரெட்மி தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய சாதனமானது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனானது ஏஐ பெஞ்ச்மார்க் பிடிப்பில் காணப்படுகிறது. இந்த சாதனம் 3 சி இயங்குதளத்தின் மூலம் சான்றிதழைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் 133 மதிப்பெண்களுடன் ஐக்யூ இசட் 1

முதலிடத்தில் 133 மதிப்பெண்களுடன் ஐக்யூ இசட் 1

இந்த பட்டியலின்படி வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 79.2 மதிப்பெண்களுடன் செயல்திறனில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஏஐ பட்டியலின்படி முதலிடத்தில் 133 மதிப்பெண்களுடன் ஐக்யூ இசட் 1 இருக்கிறது. ரெட்மி நோட் 10ஐ விட ஐக்யூ அதிக புள்ளிகளே பெற்றிருக்கிறது.

ரெட்மி 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்க

ரெட்மி 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்க

இந்திய சந்தையில் நேற்று ரெட்மி நோட் 9 அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்ததாக ரெட்மி நோட் 10 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில் ரெட்மி நோட் 10 இல் 8 ஜிபி ரேம், 6.57 அங்குல எல்இடி டிஸ்ப்ளே வசதி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த சாதனமானது 1,080 x 2,520 பிக்சல்கள் எஃப்.எச்.டி + ரெசல்யூஷனோடு வரும் என தெரிகிறது.

மீடியா டெக் டைமன்ஷன் 820 5 ஜி சிப்செட்

மீடியா டெக் டைமன்ஷன் 820 5 ஜி சிப்செட்

வாட்டர்டிராப் நாட்ச் இருக்கும் எனவும் இதில் மீடியா டெக் டைமன்ஷன் 820 5 ஜி சிப்செட்டுடன் வருவதாக கூறப்படுகிறது. சாதனம் 256 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 2TB வரை சேமிப்பகத்தை விரிவாக்க விருப்பத்துடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்ஸில் இயங்குகிறது .இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ வீடியோ பிளேபேக் மற்றும் 16 ஜிபி ரேம் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!

48MP முதன்மை கேமரா

48MP முதன்மை கேமரா

கேமராவைப் பொருத்தவரை, 48MP முதன்மை கேமரா ஆதரவோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனம் 16 எம்பி செல்பி கேமராவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி நோட் 9 6.53 இன்ச் முழு எச்டி + (1,080 x 2,340 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட்

ரெட்மி நோட் 9 ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்தியாவில் மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. இந்த சாதனம் MIUI 11 மற்றும் Android 10 இல் இயங்குகிறது. ரெட்மி நோட் 9 ஒரு குவாட் கேமரா அமைப்புடன் 48 எம்.பி முதன்மை கேமராவுடன் வருகிறது. நோட் 10 இதேபோன்ற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 10 விரைவில்

ரெட்மி நோட் 10 விரைவில்

AI பட்டியலில் இருந்து முந்தைய அறிக்கைகள் மற்றும் தகவல்கள் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி மட்டுமே கசிந்துள்ளன. இருப்பினும், ரெட்மி நோட் 10 விரைவில் இந்திய சந்தையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ப்ரோ வேரியண்ட் வெளியிடப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi redmi may next announce is redmi note 10 spotted online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X