Xiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
சியோமி நிறுவனம் ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ரெட்மி K30 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை, சிறப்பம்சம் மற்றும் அதன் பிரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ரெட்மி K30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை
ரெட்மி K30 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.32,300 என்ற விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 36,650 என்ற விலையிலும் மற்றும் இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் தோராயமாக ரூ .39,800 என்ற விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன்னின் விலை
ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன்னின் இந்திய மதிப்பு விலை தோராயமாக ரூ.40,860 என்ற விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி K30 ப்ரோஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனின், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.43,000 என்ற விலையில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி K30 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67' இன்ச் அமோலேட் HDR 10+ டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி பிராசஸர்
- 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்
- 20 மெகா பிக்சல் செல்ஃபீ கேமரா
- 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ கேமரா
- 13 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
- 123 டிகிரி FOV டெப்த் சென்சார்
- MIUI 11 அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 4700 எம்.ஏ.எச் பேட்டரி
- 6.67' இன்ச் அமோலேட் HDR 10+ டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி பிராசஸர்
- 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்
- 20 மெகா பிக்சல் செல்ஃபீ கேமரா

நான்கு கேமரா கொண்ட குவாட் கேமரா அமைப்பு

ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் சிறப்பம்சங்கள்

ஜூம் கேமரா
64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட டெலிபோட்டோ கேமரா
13 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
123 டிகிரி FOV டெப்த் சென்சார்
MIUI 11 அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
33W பாஸ்ட் சார்ஜிங்
4700 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications