சியோமி ரெட்மீ கே20 ரிவியூ! சக்திவாய்ந்த ஹார்டுவேர் மூலம் சமாளிக்கப்பட்ட பீரிமியம் லுக்..

|

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு தனது ரெட்மீ தொடரில் சில தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னணியில் உள்ள இந்த சீன பிராண்ட்-ன் ரெட்மீ நோட் 7 சீரிஸ் இந்த பிரிவுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் ரெட்மீ தொடரில் கே20 ஸ்மார்ட்போன்களை அறிவித்ததுள்ளது.

விசாலமான பேட்டரி யூனிட்

ரெட்மீ நோட் 7 மொபைல் இந்நிறுவனத்தின் 48எம்பி முதன்மை கேமரா வழங்கிய முதல் ஸ்மார்ட்போன் என்பது போல, கே20 மொபைல் பாப்அப் செல்ஃபி கேமரா அம்சத்தை கொண்ட முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் ஆகும். கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் மிட்ரேன்ஞ் சிப்செட் போன்ற சக்திவாய்ந்த வன்பொருள், மூன்று-பின்புற கேமரா மற்றும் விசாலமான பேட்டரி யூனிட் போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்த ரெட்மீ கே20 ஸ்மார்ட்போனின் செயல்திறன், பேட்டரி, கேமரா, மென்பொருள், மற்றும் பெஞ்ச்மார்க் பற்றி இங்கு காணலாம்.

சிறப்பான தோற்றமளிக்கும் வடிவமைப்பு

கே20 ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தாலும், கே20 போன் சாய்வான பேனலை வழங்குவதுடன், க்ளேசியர் ப்ளூ, ப்ளேம் ரெட், மற்றும் கார்பன் ப்ளேக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 3டி வளைந்த கொரில்லா 5 கண்ணாடி மூலம் வெளிப்புற சேதங்களில் இருந்து தடுக்கப்படுகிறது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள ஷைனிங் பேக் பேனல் பிங்கர்பிரிண்ட்-ஐ எளிதாக்குவது போல இதில் இல்லை. மற்ற ரெட்மீ போன்களை போலவே இதிலும் பின்புறத்தில் 3 கேமராக்கள் செங்குத்தாக அமைந்துள்ளன.

போனின் மேற்புறத்தில் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பாப்அப் செல்ஃபி கேமரா உள்ளநிலையில், கீழ்புறம் சிம்கார்டு ட்ரே, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. வலதுபுறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்களை கொண்ட இந்த போன், சிறப்பான தோற்றத்தை மட்டும் கொண்டிருக்காமல் நல்ல பிடிமானத்தையும் வழங்குகிறது.

வளைவான முனைகளை கொண்டிருப்பதால் ஒரு கையால் கையாளுவது எளிதாக இருப்பதுடன், திரையில் ஸ்க்ரோல் செய்வது போன்ற அடிப்படையான விசயங்களை செய்ய முடிகிறது.

பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.

உயர்தர மீடியோவிற்கு சிறந்தது

6.3 அங்குல FHD + + AMOLED திரையை கொண்ட இந்த போன் அதிகபட்ச பார்வை அனுபவத்திற்கு அனுமதிக்கிறது. Widevine L1 அம்சத்தின் மூலம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோக்களை OTT தளங்களில் 1080p தரத்தில் பார்க்க முடியும்.

பாதுகாப்பிற்காக திரையிலேயே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உள்ள நிலையில், எப்போதும் போல ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. பிங்கர்பிரிண்ட் வைப்பது எளிதாக இருப்பதுடன், இந்த ஸ்கேனர் துல்லியமாகவும், விரைவாகவும் உள்ளது.

புகைப்படம் எடுக்க பொருத்தமானது

ரெட்மீ கே20 மொபைல் அதன் ப்ரோ போலவே சென்சாருடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.மேலும் 48MP (F / 1.75 அபர்ட்சர்) சோனி IMX582 முதன்மை சென்சார், 124.8 டிகிரி FOV உடன் 13MP அகல சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP (F / 1.4) டெலிபோட்டோ சென்சார் போன்றவற்றையும் கொண்டுள்ளது.


HDR, போர்ட்ரேட், புரோ, AI காட்சி கண்டறிதல் போன்ற உங்கள் படங்களை மேம்படுத்தக்கூடிய பல அம்சங்களை கொண்டுள்ளது. OIS (ஆப்டிகல் பட நிலைப்படுத்துதல்) அம்சம் இல்லை எனினும் , அதே போன்ற EIS (எலக்ட்ரானிக் பட நிலைப்படுத்தல்) அம்சம் உள்ளது.


இந்த போனில் 960fps ஸ்லோமோசன் வீடியோக்கள், 30fps 4k வீடியோக்கள் மற்றும் டைம் லேப்ஸ் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனில் 20MP பாப்அப் கேமராவும், அது இயங்கும் போது ஒளிரும் நீல நிற எல்ஈடி விளக்குகளும் உள்ளன.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: ஷாக் சம்பவம்.!கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: ஷாக் சம்பவம்.!

சிறப்பான வன்பொருள் ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டு வசதி இல்லை

எட்டு க்ய்ரோ 470 கோர் உடன் கூடிய அக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் மற்றும் அட்ரினோ 618 ஜிபியூ இந்த போனுக்கு சக்தியளிக்கிறது. சமீபத்திய மிட்-ரேன்ஞ் சிப்செட் வழங்கும் முதல் ஸ்மார்ட்ஃபோனான இது சிறப்பான செயல்திறனை வழங்குகிறது. 6 ஜிபி ரேம் + 64GB சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு என இரு விதமாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வன்பொருள் பிரிவில் உச்சத்தில் இருந்தாலும், மைக்ரோ எஸ்டி கார்டு வசதி இல்லாதது ஒரு பின்னடைவு.


கேம் டர்போ மோட்2.0 அம்சத்தை கொண்டிருப்பதால், பப்ஜி உள்ளிட்ட எந்தவொரு கேமையும் சிறப்பான அனுபவத்துடன் விளையாட அனுமதிக்கிறது.

மென்பொருள், பேட்டரி

ஆண்ராய்டு ஃபை உடன் எம்ஐயுஐ கொண்ட இந்த போன் பயன்படுத்த எளிதாக இருப்பதுடன், ஒரே வகையான செயலிகளை தொகுதிகளாக பிரிக்க அனுமதிக்கிறது.

டெய்லிஹண்ட், பேடிம் போன்ற பல்வேறு செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், உள்ளுணர்வு திறனுடைய வால்பேப்பர் செயலியான க்ளான்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் உள்ள 4000mAh பேட்டரி சந்தையில் உள்ள அனைத்து நடுத்தர ஸ்மார்ட்போன்களிலும் உள்ள நிலையில், இதில் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது. 18W சார்ஜரில் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் ஒரு மணி நேரமே எடுத்துக்கொள்ளும் நிலையில், சாதாரணமாக பயன்படுத்தும் போது ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும்.

வாங்குவதற்கு ஏற்றதா?

இந்த கே20 போன் உயர்தர மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போன் என்பதை மறுக்கமுடியாது என்றபோதிலும், இந்த பிரிவில் நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. உதாரணமாக பாப்அப் செல்ஃபி கேமரா உள்ளிட்ட இதே போன்ற அம்ங்களை வழங்கும் ரியல்மீ எக்ஸ் ரூ20,000க்கு கீழே கிடைக்கிறது.

அது ஒருபுறம் இருந்தாலும், கே 20 சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி உயர்தர தோற்றத்தையும் கொண்டுள்ளது. சிறப்பான புகைப்படம், வீடியோ, செயல்திறன் மற்றும் கேமிங் அம்சமுள்ள மிட்ரேன்ஞ் மொபைல் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இது சிறப்பான ஒன்று.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi K20 Review in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X