மூன்று கேமரா ஆதரவுடன் களமிறங்கும் அட்டகாசமான ரெட்மி கே20 ப்ரோ.!

இக்கருவி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று பிரைமரி கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு சிறப்பம்ஙக்ளைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி:

பேட்டரி:

ரெட்மி கே20 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi K20 pro with Snapdragon 855 chipset India launch confirmed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X