சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

|

சியோமி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்டபோன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. எனவே பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை
இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

கே20 ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தாலும், கே20 போன் சாய்வான பேனலை வழங்குவதுடன், க்ளேசியர் ப்ளூ, ப்ளேம் ரெட், மற்றும் கார்பன் ப்ளேக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 3டி வளைந்த கொரில்லா 5 கண்ணாடி மூலம் வெளிப்புற சேதங்களில் இருந்து தடுக்கப்படுகிறது.

6.3 அங்குல FHD + + AMOLED திரையை கொண்ட இந்த போன் அதிகபட்ச பார்வை அனுபவத்திற்கு அனுமதிக்கிறது. Widevine L1 அம்சத்தின் மூலம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோக்களை OTT தளங்களில் 1080p தரத்தில் பார்க்க முடியும். பாதுகாப்பிற்காக திரையிலேயே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உள்ள நிலையில், எப்போதும் போல ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது. பிங்கர்பிரிண்ட் வைப்பது எளிதாக இருப்பதுடன், இந்த ஸ்கேனர் துல்லியமாகவும், விரைவாகவும் உள்ளது.

சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

ரெட்மீ கே20 மொபைல் அதன் ப்ரோ போலவே சென்சாருடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.மேலும் 48MP (F / 1.75 அபர்ட்சர்) சோனி IMX582 முதன்மை சென்சார், 124.8 டிகிரி FOV உடன் 13MP அகல சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP (F / 1.4) டெலிபோட்டோ சென்சார் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

HDR, போர்ட்ரேட், புரோ, AI காட்சி கண்டறிதல் போன்ற உங்கள் படங்களை மேம்படுத்தக்கூடிய பல அம்சங்களை கொண்டுள்ளது. OIS (ஆப்டிகல் பட நிலைப்படுத்துதல்) அம்சம் இல்லை எனினும் , அதே போன்ற EIS (எலக்ட்ரானிக் பட நிலைப்படுத்தல்) அம்சம் உள்ளது.

சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

இந்த போனில் 960fps ஸ்லோமோசன் வீடியோக்கள், 30fps 4k வீடியோக்கள் மற்றும் டைம் லேப்ஸ் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனில் 20MP பாப்அப் கேமராவும், அது இயங்கும் போது ஒளிரும் நீல நிற எல்ஈடி விளக்குகளும் உள்ளன.
சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!

இந்த போனில் உள்ள 4000mAh பேட்டரி சந்தையில் உள்ள அனைத்து நடுத்தர ஸ்மார்ட்போன்களிலும் உள்ள நிலையில், இதில் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது. 18W சார்ஜரில் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் ஒரு மணி நேரமே எடுத்துக்கொள்ளும் நிலையில், சாதாரணமாக பயன்படுத்தும் போது ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும்.
Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi K20 New Android 10-Based MIUI Update Starts Rolling Out : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X